📅 Thursday, 26 November 2026 IST | கார்த்திகை 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 26, 2026 03:03 AM

திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் அத்துமீறிய பாதிரியார்?: இருதரப்பினர் இடையே மோதல்

திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் அத்துமீறிய பாதிரியார்?: இருதரப்பினர் இடையே மோதல்

திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் அத்துமீறிய பாதிரியார்?: இருதரப்பினர் இடையே மோதல்

இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Published : November 25, 2026 at 9:00 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே திருமணமான பெண்ணிடம் பாதிரியார் ஒருவர் அத்துமீறியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம், சிங்கித்துறை பகுதியில் பாதிரியார் ஒருவருக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த அப்பெண்ணின் கணவர், தனது மனைவியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுபற்றி கேட்டபோது பாதிரியாரின் ஆதரவாளர்கள் தனது வீட்டிற்கு வந்து பொருட்களை சூறையாடியதாகவும் கூறி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, மனைவியிடம் அத்துமீறியதால் ஆத்திரமடைந்த கணவர், தனது தந்தை செல்டன் மற்றும் நண்பர்களுடன் பாதிரியார் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது.