📅 Thursday, 26 November 2026 IST | கார்த்திகை 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 26, 2026 03:03 AM

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத விவகாரம்: மதுரையில் பணியாற்றிய 4 முன்னாள் ஆட்சியர்கள் நேரில் ஆஜர்!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத விவகாரம்: மதுரையில் பணியாற்றிய 4 முன்னாள் ஆட்சியர்கள் நேரில் ஆஜர்!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத விவகாரம்: மதுரையில் பணியாற்றிய 4 முன்னாள் ஆட்சியர்கள் நேரில் ஆஜர்!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய சங்கீதா, பிரவீன்குமார், நிஷாந்த், ஆகாஷ் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் முறையாக நிறைவேற்றுவதில்லை என நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் அக்கறை இல்லை என்றும், அலுவலகத்திற்கு வருவது, சம்பளம் வாங்குவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருப்பதாகவும் நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த விசாரணை நடைபெற்றது.