TVK vs DMK: கலர் டிவி உங்க அப்பா வீட்டுப் பணத்திலா கொடுத்தது? திமுக
TVK vs DMK: கலர் டிவி உங்க அப்பா வீட்டுப் பணத்திலா கொடுத்தது? திமுக-வுக்கு தவெக கேள்வி
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அவர்களின் அப்பா பணத்தில் கொடுத்தது போல மார்தட்டிக் கொள்கிறார்கள் என்று திமுக-விற்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி வகித்தது. அப்போது, திமுக அரசு அனைத்து வீடுகளுக்கும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை அளித்தது. அப்போது, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அளிக்கப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். ஏனென்றால், அப்போது தொலைக்காட்சி என்பதே பலரது வீடுகளிலும் இல்லாத ஒன்றாகவே இருந்தது.
இந்த திட்டத்தை திமுகதான் கொண்டு வந்தது, கருணாநிதிதான் வழங்கினார் என்று திமுக-வினர் இன்றளவும் பெருமையாக கூறி வருகின்றனர். இதை விமர்சித்து தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.
அப்பா வீட்டுப் பணத்தில் கொடுத்ததா?
ஒரு கதை சொல்லட்டுமா சார்! மக்கள் நலத்திட்டம் என குடும்ப நலன் பேணிய கதை இது. மக்கள் வரிப்பணத்தில் தாத்தா வண்ணத் தொலைக்காட்சி கொடுத்ததை, “எங்க தாத்தா கொடுத்தது… எங்க தாத்தா கொடுத்தது…” என ஏதோ அவர்களின் அப்பா வீட்டு பணத்தில் கொடுத்ததைப் போல மார்தட்டிக் கொள்கின்றனர்.
ஒரு கதை சொல்லட்டுமா சார்!மக்கள் நலத்திட்டம் என குடும்ப நலன் பேணிய கதை இது.மக்கள் வரிப்பணத்தில் தாத்தா வண்ணத் தொலைக்காட்சி கொடுத்ததை,“எங்க தாத்தா கொடுத்தது… எங்க தாத்தா கொடுத்தது…”என ஏதோ அவர்களின் அப்பா வீட்டு பணத்தில் கொடுத்ததைப் போல மார்தட்டிக் கொள்கின்றனர்.…
கட்டுமரக் கதைகள்:
கொடுப்பதையும் கொடுத்துவிட்டு, கேபிள் கட்டணம் என்ற பெயரில் குடும்ப ஆதிக்க நிறுவனங்கள் மூலம் மக்களிடமிருந்து பணம் வசூலித்து, தங்களது பைகளை நிரப்பிக்கொண்டனர்.
வெளியில் “மக்கள் நலத்திட்டம்” என நாடகமிட்டு,உள்ளே “குடும்ப நலன்” காத்த உத்தம சிகாமணிகளே…!வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும் தவெக ஆட்சியை தேர்ந்தெடுத்த மக்கள் இனியும் உங்களது கட்டுமரக் கதைகளை நம்ப தயாராக இல்லை!
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
வண்ணத்தொலைக்காட்சி தமிழ்நாடு அரசின் சார்பில் அப்போது அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் கேபிள் இணைப்பு மூலமாக பல தொலைக்காட்சிகளை கண்டுகளித்தனர். கருணாநிதியின் நெருக்கமான ரத்த சொந்தமான கலாநிதி மாறனுக்கு சொந்தமானது சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் வருவாயை அதிகரிப்பதற்காகவே வண்ணத்தொலைக்காட்சி அளிக்கப்பட்டதாக அப்போது சிலர் விமர்சித்தனர். தற்போது தவெக-வும் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே திமுக - தவெக மோதல் வலுப்பெற்று வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், இரு தரப்பினர் மத்தியிலும் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி