வரும் நவ., 30ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை மையம் தகவல்
புதுடில்லி: வரும் நவம்பர் 30ம் தேதி தெற்கு அந்தமான் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை டிசம்பர் முதல் வாரத்தில் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
தற்போதைய சூழ்நிலையில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்வான் புயல் உருவான போதும்,வலுவடைய வாய்ப்பில்லை என சொல்லப்பட்டது. பிறகு தீவிர புயலாக மேலும் வலுவடைந்து ஆந்திராவில் கரையை கடந்தது.
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து அடுத்தடுத்து மூன்று புயல்கள் உருவாகி கரையை கடந்தது. தற்போது மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.