📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 09, 2026 05:30 PM

23 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு

23 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

23 மாவட்டங்கள்

இதேபோன்று, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல். புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்கள் மற்றும் கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைத்தொடர் பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.