📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 15, 2026 04:03 PM

கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அபிஷேக் போரல். இவர் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவிக்கும் அபிஷேக் போரலுக்கும் கடந்த 2023ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அபிஷேக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

14 நாட்கள் நீதிமன்ற காவல்

பின்னர், இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்த அபிஷேக், தனிமையில் இருந்த வீடியோ, புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹூக்ளி போலீசார் கடந்த 11ம் தேதி அபிஷேக் போரலை கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், அவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அபிஷேக் போரல் சிறையில் அடைக்கப்பட்டார்.