📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 04, 2026 03:00 AM

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழி தமிழ்: பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழி தமிழ்: பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் முதன்மை மொழி​யாக தமிழை அங்​கீகரிக்க வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் நேற்று கொண்​டு​வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒரு​மன​தாக நிறைவேறியது.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் முதன்மை நீதி​மன்ற மொழி​யாக தமிழை மத்​திய அரசு அங்​கீகரிக்க வலி​யுறுத்தி சட்​டப்​பேர​வை​யில் அரசினர் தனித் தீர்​மானத்தை முதல்​வர் விஜய் நேற்று முன்​மொழிந்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் உள்ள மாவட்ட நீதி​மன்​றங்​களில் ஏற்​கெனவே தமிழ் சட்ட ரீதி​யான நீதி​மன்ற மொழி​யாக உள்ள நிலை​யில், நீதித்​துறை அமைப்​பின் மாநில உச்ச நிலை​யில் உள்ள சென்னை உயர் நீதி​மன்​றத்​தி​லும் தமிழை முதன்மை மொழி​யாக அங்​கீகரிக்க வேண்​டியது காலத்​தின் கட்​டா​யம். நீதி​யின் மொழி மக்​களுக்கு புரி​யும் மொழி​யாக இருப்​பது ஜனநாயகத்​தின் அடிப்​படை நோக்​கம். எனவே, இந்த தீர்​மானத்தை உறுப்​பினர்​கள் அனை​வரும் ஒரு​மன​தாக நிறைவேற்றித் தர வேண்​டும்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழைப் பயன்​படுத்​து​வதற்​கான தீர்​மானத்தை தமிழக சட்​டப்​பேரவை ஏற்​கெனவே கடந்த 2006 டிச.6-ம் தேதி ஒரு​மன​தாக நிறைவேற்றி மத்​திய அரசுக்கு அனுப்​பியது.

இதுகுறித்து மாநிலங்​களவை​யில் மத்​திய சட்ட அமைச்​சர் கடந்த 2018 பிப்​.2-ம் தேதி கூறும்​போது, “தமிழகத்​தின் முன்​மொழிவு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யின் ஆலோ​சனைக்கு அனுப்​பப்​பட்​டது. 2012 அக்​.16-ம் தேதி​யிட்ட கடிதத்​தின்​படி உச்ச நீதி​மன்ற முழு அமர்வு இந்த முன்​மொழிவை ஏற்​க​வில்​லை” என்று தெரி​வித்​துள்​ளார்.

தற்​போது சட்​டத் தமிழ், மொழிபெயர்ப்​பு, டிஜிட்​டல் நீதி​மன்​றங்​கள், தொழில்​நுட்ப அடிப்​படையி​லான மொழிபெயர்ப்பு மற்​றும் சட்​டத்​தரவு தளங்​கள் ஆகியவை பெரிதும் முன்​னேறி உள்​ளது. மேலும் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் மூல​மாக, தமிழில் பேசுவதை அதே நேரத்​தில் ஆங்​கிலத்​தில் கேட்​கக்​கூடிய அளவுக்கு தொழில்​நுட்​பம் முன்​னேறி உள்​ள​தால், தற்​போதைய சூழ்​நிலைக்கு ஏற்ப மறு​பரிசீலனை செய்​வது அவசி​ய​மாகிறது. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

தீர்​மான விவரம்: சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் முதன்​மை​யான நீதி​மன்ற மொழி​யாக தமிழை அங்​கீகரிக்க வேண்​டும். தமிழில் தாக்​கல் செய்​யப்​படும் மனுக்​கள், ஆவணங்​கள் மற்​றும் வாதங்​களுக்கு உரிய நடை​முறையை உரு​வாக்க வேண்​டும். உயர் நீதி​மன்​றத் தீர்ப்​புரைகள், தீர்ப்​பாணை​கள், உத்​தர​வு​கள் அனைத்​தை​யும் தமிழில் வழங்​கும் கட்​டமைப்பை உரு​வாக்க வேண்​டும்.

நீதிப​தி​கள், வழக்​கறிஞர்​கள், நீதி​மன்​றப் பணி​யாளர்​களுக்கு சட்​டத் தமிழ் மற்​றும் மொழிபெயர்ப்​புக்கு பயிற்சி அளிக்க வேண்​டும். அரசி​யலமைப்​புச் சட்ட ஷரத்து 348(2) மற்​றும் ஆட்சி மொழிச் சட்​டம் 1963 பிரிவு 7-ன்​கீழ் மாநில ஆளுந​ரால் அனுப்​பப்​படும் முன்​மொழி​வு​கள்​மீது தேவை​யான அனைத்து சட்ட நடவடிக்​கைகளை​யும் மத்​திய அரசு உடனடி​யாக மேற்​கொள்ள வேண்​டும் என்று சட்​டப்​பேரவை ஒரு​மன​தாக வலி​யுறுத்​துகிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதைத் தொடர்ந்து தீர்​மானத்தை ஆதரித்து திமுக உறுப்​பினர் எஸ்​.ரகுபதி பேசி​ய​போது, “உயர் நீதி​மன்​றத்​தில் தமிழை வழக்​காடும் மொழி​யாகக் கொண்டு வரு​வதற்கு 2006-ல் கருணாநி​தி​யும், பின்​னர் ஸ்டா​லினும் முதல்​வ​ராக இருந்​த​போது தீர்​மானம் கொண்டு வந்​தனர். தற்​போது முதல்​வர் விஜய் கொண்டு வந்​துள்ள தீர்​மானத்தை வரவேற்​கிறோம். இது எங்​கள் குழந்​தை. திமுக ஆட்​சி​யில் ஏற்​கெனவே 2 முறை தீர்​மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த 3-வது முயற்​சி​யா​வது வெற்றி பெறட்​டும்” என்​றார்.

அப்​போது குறுக்​கிட்​டுப் பேசிய அமைச்​சர் நிர்​மல் குமார், “இதற்கு முன்​ன​தாக ஆங்​கிலம் முதன்மை மொழி, அதன்​பிறகு தமிழ் மொழி என்றே தீர்​மானங்​கள் முன்​மொழியப்​பட்​டன. உயர் நீதி​மன்​றத்​தில் தமிழ் முதன்மை மொழி, அதன்​பிறகு ஆங்​கிலம் என்று தீர்​மானம் முன்​மொழிந்​துள்​ளது இதுவே முதல்​முறை. இது யாருடைய குழந்​தை​யும் அல்ல” என்​றார்.

தொடர்ந்​து, அமைச்​சர்​கள் ஷாஜ​கான், வன்னி அரசு, ராஜேஷ்கு​மார், அதி​முக​வின் தளவாய் சுந்​தரம், சி.​வி.சண்​முகம், பாமக​வின் சவுமியா அன்​புமணி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் ராமச்​சந்​திரன், மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் செல்​லசு​வாமி, பாஜக​வின் போஜ​ராஜன், தேமு​தி​க​வின் பிரேமலதா ஆகியோர் தீர்​மானத்தை ஆதரித்​துப் பேசினர். அதைத் தொடர்ந்​து, குரல்​ வாக்​கெடுப்​பு மூலம்​ தீர்​மானம்​ ஒருமன​தாக நிறைவேற்றப்​பட்​டது.