📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 04:04 AM

"கேரளா இனி கேரளம்!" அமளிக்கு இடையே மக்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; முழு விவரம்

"கேரளா இனி கேரளம்!" அமளிக்கு இடையே மக்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; முழு விவரம்

"கேரளா இனி கேரளம்!" அமளிக்கு இடையே மக்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; முழு விவரம்

கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்கு பொறுப்பேற்கக் கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியிலும் 4 முக்கிய மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. சபாநாயகர் ஓம் பிர்லா அவையை நடத்தாத சூழலில், தொடர் கூச்சல் குழப்பம் காரணமாக அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, விவாதங்களின்றியே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026-ஐ அவையில் அறிமுகப்படுத்தினார்.

கேரள மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் திருத்தம் செய்து கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்ற இந்த மசோதா வழிவகை செய்கிறது.

மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இந்த மசோதா மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுரங்கங்கள்

மாநில அரசுகள் கனிம உரிமைகள் மீது கூடுதல் வரிகள் விதிப்பதைத் தடுப்பதையும், கனிம வள நிலங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்ட இம்மசோதா, மாநிலங்களின் கூட்டாட்சித்த்துவத்திற்கு எதிரானது எனக் கூறி புரட்சிகர சோசலிச கட்சி உறுப்பினர் என்.கே.பிரேமச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க தேசிய தீர்ப்பாய ஆணையத்தை அமைக்கும் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா 2026-ஐ சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்தினார்.

இதனுடன் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 உடன் நிறைவடையவுள்ள நிலையில், பெரும்பாலான மசோதாக்கள் விவாதங்களின்றியே நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.