📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 16, 2026 12:04 PM

Magudam Day 2 Box Office

Magudam Day 2 Box Office

சென்னை: விஷால் நடிப்பில் அவரே இயக்கியிருக்கும் திரைப்படம் மகுடம். ஈட்டி பட இயக்குநர் ரவி அரசுதான் இதற்கு கதை எழுதியிருக்கிறார். இதில் விஷாலுடன் அஞ்சலி, துஷாரா விஜயன், தம்பி ராமைய்யா, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். நேற்று முன்தினம் வெளியான படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு எல்லாம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கோலிவுட்டில் பல வருடங்களாக நடிப்பில் பிஸியாக இருக்கும் விஷால்; இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே அவர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்த ஒன்றுதான். இத்தனை வருடங்களில் படம் இயக்காமல் இருந்த அவர்; தற்போது மகுடம் படத்தின் மூலம் இயக்குநராக மாறியிருக்கிறார். கதையை ஈட்டி உள்ளிட்ட படங்களின் இயக்குநரான ரவி அரசு எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலியின் ரீ என்ட்ரி: ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியும், துஷாரா விஜயனும் நடித்திருக்கிறார்கள். அஞ்சலி நீண்ட காலம் கழித்து தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். விஷால் இயக்கும் முதல் படம் என்பதால் இதன் மீது ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த ஹைப்போடு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14) தியேட்டர்களில் ரிலீஸானது. ரசிகர்களும் அந்த ஹைப்போடு படம் பார்க்க தியேட்டர்களுக்கு சென்றார்கள்.

எப்படி இருக்கிறது படம்?: முதன்முறையாக படத்தை இயக்குகிறார் எனவே கண்டிப்பாக வித்தியாசமாக ஏதாவது இருக்கும் என்ற ரசிகர்களின் நினைப்பில் ஒரு லோடு மண்ணை போட்டுவிட்டார் விஷால். பழிவாங்கல் என்ற அரத பழசான கதையை; தன்னுடைய அனுபவங்களில் கற்ற சுமாரான திரைக்கதையோடு டெலிவர் செய்திருந்தார். அது எதுவுமே ரசிகர்களிடம் சுத்தமாக எடுபடவில்லை. ஒவ்வொரு சீனிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் எல்லாம் இருந்ததால் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சீட்டில் ரசிகர்கள் நெளிய தொடங்கிவிட்டார்கள்.

முடியவில்லை சாமி: இத்தனைக்கும் படத்தில் அஞ்சலி, துஷாரா என மிகச்சிறந்த நடிகைகள் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பெரிய தாக்கத்தை கொடுக்கக்கூடிய ரோலை கொடுக்கவில்லை. பல இடங்களில் விஷாலின் மேக்கிங் சோர்வையே கொடுத்தது. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிந்த கதை, லாஜிக்கே இல்லாத சீன்கள், மொன்னையான க்ளைமேக்ஸ் காட்சி என ஒரு ஏரியாவில்கூட படம் தப்பிக்கவில்லை. லிங்கா கேரக்டருக்கு ஜிவி பிரகாஷ் போட்ட பிஜிஎம் மட்டும்தான் படத்தில் தேறக்கூடிய விஷயம் ஆகும்.

வசூல் நிலவரம்: ஆகமொத்தம் மகுடம் விஷாலுக்கு ஹிட்டை கொடுக்கவில்லை. இந்நிலையில் விமர்சன ரீதியாக செமத்தியாக அடி வாங்கிய மகுடம் பாக்ஸ் ஆஃபிஸிலும் படுத்தேவிட்டது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி முதல் நாளில் 60 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்த அப்படம்; இரண்டாவது நாளான நேற்று கூடுதலாக பத்து லட்சம் ரூபாயை வசூலித்து 70 லட்சம் ரூபாய் வசூல் என்ற நிலையில் இருக்கிறது. ஆகமொத்தம் இந்தியாவில் அப்படம் இரண்டு நாட்களில் வெறும் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை மட்டுமே எடுத்திருக்கிறதாம்.