பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி
பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!
தனது பேத்திக்கு நடந்த கொடுமையைக் கேட்டு வேதனை அடைந்த பாட்டி, அரிவாளுடன் மாணிக்கத்தைத் தேடி வந்துள்ளார்.
10 -க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டு விழுந்ததால் மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இந்நிலையில், பாதி வழியில் செல்லும்போது தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், சிறுமியின் பாட்டியை பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். பின்னர், சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு அவரை விசாரணை செய்து வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணிக்கம், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 4 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், குளித்தலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.