📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 22, 2026 01:01 PM

பஞ்சாயத்தில் மூக்குடைந்த சாமுண்டீஸ்வரி.. உங்களைப் பிரிச்சுக் காட்டுறேன்.. கார்த்திகை தீபம்

பஞ்சாயத்தில் மூக்குடைந்த சாமுண்டீஸ்வரி.. உங்களைப் பிரிச்சுக் காட்டுறேன்.. கார்த்திகை தீபம்

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், சாமுண்டீஸ்வரி சந்திரகலா ஊர் பஞ்சாயத்தில் கார்த்திக் மீது புகார் கொடுக்கிறார். கார்த்திக் என்னுடைய பெண்ணை மனதை மாற்றி ஏமாற்றி அழைத்து சென்றுவிட்டான். ஏற்கனவே காசு வெட்டி போட்டு அவர்களைப் பிரித்த நிலையில், இப்போது என்னுடைய பெண்ணை பயமுறுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார் என குற்றம் சாட்டுகிறார். இதையடுத்து பஞ்சாயத்து கூட, கார்த்திக், ரேவதி என்னை பிரித்தது உண்மைதான். ஆனால் ரேவதி என்னுடன் தான் வாழ விரும்புவதாக கூறிய பிறகு, நான் எப்படி அவளுடன் சேர்ந்து வாழ மறுக்க முடியும்? என்கிறார். இதனால் பஞ்சாயத்தினர் ரேவதியை அழைத்து வரச் சொல்கின்றனர்.

கார்த்திகை தீபம்: பஞ்சாயத்திற்கு வரும் ரேவதி, காசு வெட்டி போட்டு எங்களை பிரித்தபோது என் அம்மா சொல்ல சொன்ன விஷயத்தைத் தான் நான் சொன்னேன். அவர்கள் என்னை மிரட்டியதால் வேறு வழியில்லாமல் கார்த்திக்குடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறினேன். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் கார்த்திக்குடன் தான் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார். இதையடுத்து பஞ்சாயத்தினர், கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும், முன்பு காசு வெட்டி போட்டு அவர்களைப் பிரித்த தீர்ப்பு செல்லாது என்றும் தீர்ப்பளிக்கின்றனர்.

பிரிச்சி காட்டுறேன்: இதனால் ஆத்திரமடையும் சாமுண்டீஸ்வரி, கார்த்திக் உங்கள் ஊர்க்காரன் என்பதால் இப்படிச் சாதகமாக தீர்ப்பு கொடுக்கிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு பஞ்சாயத்து தலைவர்கள், அப்போது காசு வெட்டி பிரித்தபோது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்த போது, நாங்கள் நல்லவர்களாகத் தெரிந்தோமா. இப்போது உங்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னதால் நாங்கள் கெட்டவர்களாக தெரிகிறோமா? என பதிலடி கொடுக்கின்றனர். இதனால் கோபமடைந்த சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுடன் அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது, சாமுண்டீஸ்வரியை தனியாக சந்திக்கும் கார்த்திக், அத்தை, நீங்க செய்வது மிகவும் தவறான விஷயம். என்னை ஜெயிலில் போடுவது, என் மீது புகார் கொடுத்தால் ரேவதியின் மனசு மாறிவிடும் என்று நினைக்கிறீர்கள். ஆனால், அது நடக்காது. ரேவதி என்னுடன் சேர்ந்து வாழத்தான் ஆசைப்படுகிறாள் என்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடையும் சாமுண்டீஸ்வரி, இன்னும் ஒரே மாதத்திற்குள் உன்னையும் ரேவதியையும் நான் பிரித்துக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார்.

அடுத்த பிளான்: மறுபக்கம், சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்ததும், பஞ்சாயத்தில் என்ன நடந்தது என்று அனைவரும் ஆர்வமாகக் கேட்கின்றனர். என்ன நடக்கும் அந்த ரேவதி எனக்கு என் கணவர்தான் முக்கியம் என்று பஞ்சாயத்தில் சொல்லிவிட்டதாக சாமுண்டீஸ்வரி ஆதங்கத்துடன் கூறுகிறார். அதற்கு ராஜராஜன், அவள் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறாள். அவள் அவளுடைய புருஷனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறாள். அதில் உனக்கென்ன பிரச்சனை? என்று கேட்க, சாமுண்டீஸ்வரி ராஜராஜன் மீது கடும் கோபம் கொள்கிறார்.

ஆடிதலைபெருக்கு: மறுபக்கம் கார்த்திக் வீட்டிற்கு வந்ததும், அம்மா என்ன சொன்னார்கள் என்று ரேவதி கேட்கிறார். சாமுண்டீஸ்வரி தங்களைப் பிரித்து விடுவதாக சவால் விட்ட விஷயத்தை மறைத்து, ஒன்றும் சொல்லவில்லை என்று கார்த்திக் மழுப்பலாகக் கூறுகிறார். ஆனால், ரேவதிக்கு அம்மா என்ன சொல்லியிருப்பார் என்று வருத்தத்தில் இருக்கிறார். இதைப் பார்த்த பரமேஸ்வரி பாட்டி, எதற்காக உங்கள் அம்மா உன்னையும் கார்த்திக்கையும் பிரிக்க நினைக்குறானு தெரியல, என்னைக்குத்தான் அவ மாறப்போறனு தெரியவில்லை என்று வருத்தப்படுகிறாள்.

பாட்டியின் ஐடியா: மேலும், இன்னைக்கு ஆடிப்பெருக்கு. திருமணம் ஆன முதல் வருடத்தில் வரும் ஆடிப்பெருக்கை தலை ஆடிப்பெருக்கு என்று சொல்லுவாங்க, இந்த நாளில் மாமனார் வீட்டில் இருந்து மருமகனுக்கு புத்தாடை கொடுத்து, கரி விருந்து வைத்து சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால், நம்ம குடும்பத்தின் நிலைமை இப்படி இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. நீ கார்த்திக்குடன் பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு சென்று, அங்குள்ள குளத்திற்கு விளக்கேற்றி விட்டு வா. நிச்சயமாக உங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று ஆறுதல் கூறுகிறார். இதையடுத்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.