📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 09, 2026 11:34 AM

போதை இல்லா கோவைக்கு 10,000 பேர் மராத்தான் ஓட்டம்

போதை இல்லா கோவைக்கு 10,000 பேர் மராத்தான் ஓட்டம்

கோவை: ‘போதைப்பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம்’ என்ற தலைப்பில் நேற்று மராத்தான் ஓட்டம் நடந்தது. ஒரு முடிவின் துவக்கம் என்று போலீஸ் அதற்கு பெயர் சூட்டி இருந்தனர்.

மதுக்கரை– மாதம்பட்டி மேற்கு புறவழி சாலையில் அமைச்சர் விக்னேஷ் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘‘ போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டத்தால் மட்டும் இது சாத்தியமில்லை; அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். உளவியல் சார்ந்த சிக்கல்களும் உள்ளன. கல்லுாரிகளில் சக மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தினால், தயக்கமின்றி புகார் அளிக்கவேண்டும்’’ என்றார்.

போலீசார், மாணவர்கள், பொதுமக்கள் என, 10 ஆயிரம் பேர் ஓடினர். கையெழுத்து இயக்கமும் நடந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, எஸ்.பி. பவன்குமார் பங்கேற்றனர்