Tamil Nadu
August 18, 2026 06:03 AM
பயிர் கடன் தள்ளுபடி; மீண்டும் ஏமாற்றம்: விவசாய சங்கம் அறிவிப்பு
பயிர் கடன் தள்ளுபடி; மீண்டும் ஏமாற்றம்: விவசாய சங்கம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி அறிக்கை:
வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு வெளியிட்ட முதல் அறிவிப்பை தொடர்ந்து, அடுத்த அறிவிப்பையும் ஏற்க முடியாத நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தற்போது சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் மாபெரும் போராட்டம் நடத்தும் நிர்பந்தத்தை தமிழக அரசே ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu