Tamil Nadu
August 18, 2026 06:03 AM
வி.சி.க., மாநாட்டிற்காக விடுமுறை: பா.ஜ., கண்டனம்
சென்னை: தமிழக பா.ஜ., தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை;
வி.சி.க., மாநாடு நடந்த உளுந்துார்பேட்டையில் பள்ளி, கல்லுாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை கருத்தில் வைத்தும், இந்த நடவடிக்கை என சொல்வது வெட்கக்கேடு.
மாணவர்களின் நலன் பாதிக்குமெனில், விடுமுறை நாளில் அரசியல் கட்சிக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருப்பது வெட்கக்கேடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu