📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 14, 2026 11:32 AM

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இயலிசை நிகழ்ச்சி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இயலிசை நிகழ்ச்சி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் எல்.வி. ஆதவன், சுரேஷ் ஆகாஷ் ஸ்ருதி இசைக் குழுவினருடன் இணைந்து வழங்கிய “திருவிளையாடலில் தமிழ் விளையாடல்” மாபெரும் இயலிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் நடிகை பத்மஸ்ரீ சௌகார் ஜானகியின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் இரா. இராஜ்குமார் பாலா, இணைப் பொருளாளர் பாலுச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் ஆ. வெங்கடேசன், வே. இளஞ்சோழன், பி. ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களையும், பேச்சாளரையும், இசைக் குழுவினரையும் சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வே. இளஞ்சோழன் தொகுத்து வழங்கினார்.

தில்லி வாழ் தமிழ் இசை ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.