📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 14, 2026 11:42 AM

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துப்போட்ட விஜய் சேதுபதி.. கடித்து குதறும் விஜய் ஃபேன்ஸ்.. என்ன காரணம்?

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துப்போட்ட விஜய் சேதுபதி.. கடித்து குதறும் விஜய் ஃபேன்ஸ்.. என்ன காரணம்?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கமல்ஹாசன் டபுள் மீனிங்கில் அரசியல் வசனங்களை பேசும் போது கொண்டாடிய தமிழ் ரசிகர்கள் இப்போ விஜய் சேதுபதி அதே போல டபுள் மீனிங்கில் அரசியல் பேசுவதை பார்த்து கடுப்பாகி உள்ளனர்.

திமுகவுக்கு சப்போர்ட்டாகவும் விஜய்க்கு எதிராகவும் தொடர்ந்து அரசியல் கருத்துக்களை செல்லும் இடமெல்லாம் விஜய் சேதுபதி பேசி வருகிறார் என்றும் ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு படத்தின் நிகழ்ச்சியில் கூட விடிவி கணேஷிடம் கலாய்த்து பேசுவது போல விஜய்யை அட்டாக் செய்திருந்தார் விஜய் சேதுபதி என்றனர்.

ஆனால், அதை விட தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை அதிகரிக்க விஜய்யின் அரசியலை கிண்டலடிப்பது போல டபுள் மீனிங்கில் பேசி வருகிறார் என கடந்த 2 நாட்களாகவே விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் விஜய் சேதுபதியை அட்டாக் செய்து வரும் நிலையில், தற்போது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து பதிவிட்ட நிலையிலும், விஜய் சேதுபதியை கடித்து குதறி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்: கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டசபை டாஸ்க்கை வைத்து விஜய்யின் தவெக அரசை கிண்டலடிப்பது போலவும் கடுமையாக விமர்சிப்பது போலவும் கரூர் சம்பவத்தில் ஓடி வந்தது தவறு என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவது போலவும் விஜய் சேதுபதி பேசி சர்ச்சைகள் பற்றி எரியும் நிலையில், செம கூலாக "இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்." என பதிவிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

கொதித்த ரசிகர்கள்: விஜய் சேதுபதி ஏற்கனவே தான் ஒரு நாத்திகன் என சொல்லிய பேட்டிகளையும் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசிய காட்சிகளையும் எடுத்துப் போட்டு, இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்போ மட்டும் வேண்டுமென்றே விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்றீங்களா விஜய் சேதுபதி என விஜய் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். மேலும், விஜய் சேதுபதியின் லீலைகள் அம்பலமாகும் என்றும் அவருக்கும் ஜாபர் சாதிக்கும் இடையே நட்பு இருக்கு என்றும் இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் ஷேர் செய்து கடித்துக் குதறி வருகின்றனர்.

விஜய்யுடன் இணைந்து: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் விஜய்க்கு எதிராக முரட்டு வில்லனாக நடித்திருந்தாலும், படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஜய்யிடம் முத்தமெல்லாம் கேட்டு வாங்கியிருந்தார் விஜய் சேதுபதி. திடீரென அவருக்கும் விஜய்க்கும் என்ன பகை என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.