📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 02:33 AM

திருமண மண்டபங்களில் ஆடை விற்பனை நடத்துவதற்கு அனுமதி இல்லை

திருமண மண்டபங்களில் ஆடை விற்பனை நடத்துவதற்கு அனுமதி இல்லை

திருமண மண்டபங்களில் ஆடை விற்பனை நடத்துவதற்கு அனுமதி இல்லை

ஈரோடு மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், நட்சத்திர ஹோட்டல் அரங்குகளில் வணிக நோக்கிலான ஆடை விற்பனை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புகள் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், நட்சத்திர ஹோட்டல் அரங்குகளில் நடைபெறும் ஆடை விற்பனைகள், உணவுத் திருவிழாக்கள், விழாக்கால விற்பனை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வணிக கண்காட்சி, விளையாடுமிடம், பொருட்காட்சி போன்றவைகளால் அரசுக்கும், உள்ளுா் வணிகா்களுக்கும் வரி மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதனால் கட்டட உரிமம் எந்த உபயோகத்துக்காக வழங்கப்பட்டதோ அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், திருமண மண்டபங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை உரிய அனுமதியின்றி நடத்தக் கூடாது. அவ்வாறு அனுமதியின்றி நடத்துபவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருமண மண்டபங்களில் வணிக நோக்கிலான ஆடை விற்பனை நிகழ்ச்சிகள் நடைபெறாமல் கண்காணித்து, விதிமுறைகளை மீறுவோா் மீது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் திருமண மண்டபங்கள், நட்சத்திர ஹோட்டல் அரங்குகளின் உரிமையாளா்கள் முன் அனுமதியின்றி உணவுத் திருவிழாக்கள், விழாக்கால விற்பனை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வணிக கண்காட்சி, விளையாடுமிடம், பொருட்காட்சி நடைபெறுவதை அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.