📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 07, 2026 10:30 PM

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதிக்க வேண்டும்

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதிக்க வேண்டும்

சென்னையில் கலைஞர் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசப்பாடலுக்கும், தேசிய கீதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கிறீர்கள், தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முன்னுரிமை கொடுத்தால் என்ன என்ற கேள்வியை கேட்டு இந்தியா கூட்டணி 21 எம்.பி.க்கள் கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் ஒத்த கருத்து, தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடவேண்டும் என்பதுதான்.

இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தமிழ்நாட்டிற்கு அர்ப்பணித்தவர் கருணாநிதி. அவர் தான் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் மூலம் இசை அமைத்து, நாட்டுக்கு காணிக்கை செய்தார். அந்த மூல பாடலில் சில வரிகள் வட நாட்டு மக்கள், சமஸ்கிருதம் பேசும் மக்கள், ஆரிய பண்பாடு காக்கிறவர்களை காயப்படுத்தும் என்று கருதிய கலைஞர், அந்த வரிகளை நீக்கினார்.

தமிழை வாழ்த்தும் பாட்டாக தமிழ்த்தாய் வாழ்த்தை நாட்டுக்கு காணிக்கையாக்கினார். உங்கள் மனம் புண்படக்கூடாது என சில வரிகளை எடுத்தாரே கலைஞர், எங்கள் மனம் புண்படுமாறு ஏன் அந்த வாழ்த்தை 3-ம் இடத்திற்கு தள்ளுகிறீர்கள் என்பதே தமிழர்களின் கேள்வி. எனவே மத்திய அரசு அந்தந்த மாநிலங்களில் மாநில பாடலுக்கு முன்னுரிமை தர வேண்டும். மேகதாது விவகாரத்தில் தமிழகத்தில் அனைவரும் ஓரணியில் இணைவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.