📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 25, 2026 12:04 PM

துருவ ஜுரல் வரலாற்று சாதனை.. வெளிநாட்டு மண்ணில் 7வது வரிசையில் இறங்கி அதிக ரன் ரெக்கார்டு

துருவ ஜுரல் வரலாற்று சாதனை.. வெளிநாட்டு மண்ணில் 7வது வரிசையில் இறங்கி அதிக ரன் ரெக்கார்டு

துருவ ஜுரல் வரலாற்று சாதனை.. வெளிநாட்டு மண்ணில் 7வது வரிசையில் இறங்கி அதிக ரன் ரெக்கார்டு

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய இந்திய இளம் வீரர் துருவ் ஜூரல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். கொழும்பில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில், 7 வது வீரராக களம் இறங்கிய துருவ் ஜூரல் 177 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் நின்று 115 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம், வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில், 7 வது அல்லது அதற்கு கீழ் பேட்டிங் செய்ய வந்து சதமடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.

நிதிஷ் குமார் ரெட்டி கடந்த 2024 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் 8 வது வீரராகக் களம் இறங்கி 114 ரன்கள் எடுத்திருந்தார். ரவீந்திர ஜடேஜா 2022 இல் இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்காம் டெஸ்டில் 7 வது வீரராகக் களம் இறங்கி 104 ரன்கள் குவித்திருந்தார். தற்போது இவர்களை முந்தி, 115 ரன்கள் எடுத்துள்ள துருவ் ஜூரல், வெளிநாட்டு மண்ணில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 7 வது அல்லது அதற்கு கீழ் களம் இறங்கி அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 7 வது வரிசையில் களம் இறங்கி சதமடித்த 9 வது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜூரல் பெற்றுள்ளார். இப்பட்டியலில் ரிஷப் பண்ட் (159 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். அத்துடன், இலங்கைக்கு எதிராக டெஸ்டில் சதமடிக்கும் 4 வது இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் 7 வது வரிசை பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். கபில் தேவ், எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த ஜூரல், இலங்கை மண்ணிலேயே சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

துருவ் ஜூரலின் இந்த சிறப்பான இன்னிங்ஸ், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய காரணமாக இருந்தது. இந்திய அணி நிர்வாகம் பேட்டிங் திறனை மேம்படுத்தி ரன் குவித்தால் தான் தொடர்ந்து இடம் கிடைக்கும் எனக் கூறிய நிலையில், ஜூரல் இந்த இன்னிங்ஸை விளையாடி அசத்தியுள்ளார். அவரது இந்த இரண்டாவது டெஸ்ட் சதம் மூலம், இந்திய அணியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இடத்தை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார்.