📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 06, 2026 09:32 PM

வேளாண் பட்ஜெட்; வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

வேளாண் பட்ஜெட்; வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

-நமது நிருபர்-

அதிமுக பொதுச்செயலாளர், இபிஎஸ்

வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் மிஞ்சியது; இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை. முக்கிய திட்டங்கள் இல்லை. ஏற்கனவே இருந்த அறிவிப்புகள் தான் தற்போதும் உள்ளது. திமுக அளித்த பட்ஜெட்டை போன்றே தவெக பட்ஜெட் உள்ளது.

நெல், கரும்பிற்கான ஆதார விலையை உயர்த்தவில்லை. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வேளாண் கடன் தள்ளுபடியிலும் விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர். தவெக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டுக்கு -0 மதிப்பெண்தான் கொடுக்க வேண்டும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை பாதுகாக்க எந்த திட்டமும் இல்லை. விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. மாற்றம் தருவோம் என்று சொன்னவர்கள் எந்த மாற்றமும் தரவில்லை.

கெமிக்கல் இல்லாத ஆரோக்கியமான உணவு உற்பத்தியை கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வேளாண் பட்ஜெட் என்பது செய்தித்தாள் படிப்பது போன்று வாசிக்கப்பட்டுள்ளது, நெல், கரும்புக்கு ஆதார விலை உயர்வு பற்றி எதுவும் இல்லை.

எதிர்க்கட்சி தலைவர், உதயநிதி

தவெக அரசு இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார்கள் என்று சொல்வதை விட, முழுக்க முழுக்க முதல்வருக்கு ஜால்ரா அடித்து மரபுக்கு மீறிய செயல்களை வேளாண்துறை அமைச்சர் சட்டசபையில் செய்துள்ளார். தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை. 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என அறிவித்தனர்.

ஆட்சிக்கு வந்த பறகு ரூ.75 ஆயிரம் வரை தான் தள்ளுபடி என அறிவித்ததை விவசாயிகள் ஏற்கவில்லை. தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றினர். ஆனால் எதையும் செய்யவில்லை. சட்டசபையில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், '' வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட். மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா? குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் திமுக எம்எல்ஏக்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

உதயநிதி செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்