📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 06, 2026 08:30 PM

விவசாயி விருது முதல் இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் வரை.. விஜய் அரசின் வேளாண் பட்ஜெட்!

விவசாயி விருது முதல் இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் வரை.. விஜய் அரசின் வேளாண் பட்ஜெட்!

விவசாயி விருது முதல் இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் வரை.. விஜய் அரசின் வேளாண் பட்ஜெட்!

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்திற்கு ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறுகுறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகளுக்கு 100 சதவீத மானியம்.

மழை, வெயிலிலிருந்து விளைபொருட்களைப் பாதுகாக 43,500 தார்பாய்கள்; இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்கான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும்; 10 பயிர்களுக்கு ரூ.50 இலட்சம் பரிசுத் தொகை

மாவட்ட அளவில் வெற்றி விவசாயி விருது; 9 பயிர்களுக்கு ரூ.67.50 லட்சம் பரிசுத்தொகை

விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது: ரூ.11 லட்சம் பரிசுத்தொகை

விவசாயிகளின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரே முகவரியில் 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கை மையங்கள்; ரூ.27.82 நிதி ஒதுக்கீடு

வேளாண் கண்காட்சி - தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழா; ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்: ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு

17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியம்; ரூ.9.36 கோடி நிதி ஒதுக்கீடு

பனைப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம் அளிக்கப்படும்.

வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டத்திற்கு ரூ.10 நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டத்திற்கு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு

தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகள்; இதற்காக ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு

தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ஏதுவாக தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு

தரமான பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட ஏதுவாக பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு

நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு

விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு

வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

வேளாண் அமைச்சர் வினோத்பூளூபெரி அவகொடா, கிவி உள்ளிட்டட உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 1.87 கோடி நிதி ஒதுக்கீடு

100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும்a 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் தூர்வாருதல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு