📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 31, 2026 01:04 AM

Vishwanath And Sons Box Office

Vishwanath And Sons Box Office

சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். கடந்த 14ஆம் தேதி வெளியான படத்துக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் வசூலிலும் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் அதன் மொத்த வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக இருந்த தோல்வி முகம் இந்த வருடம் மறைய தொடங்கியிருக்கிறது. கடந்த மே மாதத்தில் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 200 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் உருவானது. இதில் அவருடன் மமிதா பைஜூ, ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி இசையமைத்திருக்கிறார்.

சூப்பர் ரெஸ்பான்ஸ்: கடந்த 14ஆம் தேதி படமானது ரிலீஸானது. கருப்பு படம் கொடுத்த வெற்றி வைபை சூர்யா இதில் தக்க வைத்துக்கொள்வாரா என்ற அதீத ஆவலுடன்தான் திரையரங்குகளின் சீட்டுகளில் அமர்ந்திருந்தார்கள் ரசிகர்கள். ரிலீஸுக்கு முன்னதாகவே ஒரு பேட்டியில் பேசியிருந்த வெங்கி, 'இந்தப் படம் முழுக்க முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸ் கொண்டாடும்படியான ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும்' என்றுதான் குறிப்பிட்டிருந்தார்.

சொன்னதை செய்த வெங்கி: அவர் சொன்னதுபோல் படம் முழுக்க ஃபீல் குட்டாகவே இருந்தது. திருமணத்தின் மீது விருப்பம் இல்லாத ஒருவர்; தனக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த ஒரு வாடகை தாயை தன் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதுதான் அப்படத்தின் ஒன்லைன் ஆகும். அதை வெங்கி சிறப்பாக ப்ரெசெண்ட் செய்திருந்தார். சூர்யாவும் சூப்பராகவே நடித்திருந்தார்.

மமிதா சூப்பர்: முக்கியமாக மமிதா பைஜூவின் ஃபெர்ஃபார்மென்ஸ் அனைவரையுமே கவர்ந்துவிட்டது. படத்தில் அவர் தோன்றிய முதல் காட்சியிலிருந்து இறுதிவரை அனாயசமாக ஸ்கோர் செய்தார். எமோஷன், ரொமான்ட்டிக் என பல ஏரியாக்களில் எக்ஸ்பிரஷன்களால் புகுந்து விளையாடிய அவர்; ஒருகட்டத்தில் ராதிகா, சூர்யா என்ற இரண்டு மாபெரும் கலைஞர்களை காலி செய்யும் அளவுக்கு படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

வசூல் பற்றிய அறிவிப்பு: இப்படி படத்துக்கு விமர்சன ரீதியாக எக்கச்சக்க பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதேபோல் வசூலிலும் படம் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் படம் இதுவரை எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி மொத்தம் 240 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறதாம். இந்த வருடத்தில் சூர்யா நடித்த இரண்டு படங்களுமே 200 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்திருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு இருக்கிறார்கள்.