📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 14, 2026 03:00 PM

Vishwanath and Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்.. ஃபீல் குட் மூவியை கொடுத்தாரா சூர்யா?

Vishwanath and Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்.. ஃபீல் குட் மூவியை கொடுத்தாரா சூர்யா?

சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், மமிதா பைஜு, பவானி ஸ்ரீ, ராஜிவ் மேனன், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் இன்று வெளியானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

ரெட்ரோ, கருப்பு என தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த சூர்யா முற்றிலும் வித்தியாசமாக ஒரு ஃபீல் குட் குடும்ப படத்தைக் கொடுக்க வேண்டும் என வெங்கி அட்லூரி இயக்கத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.

சூர்யாவின் விருப்பத்தை வெங்கி அட்லூரி நிறைவேற்றினாரா? விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று பார்க்கலாமா? மமிதா பைஜு நடிப்பு எப்படி? என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதை: இந்தியாவிற்கு துப்பாக்கிச் சூட்டில் தங்க மெடல் வாங்கிக் கொடுக்கும் காட்சியுடன் விஸ்வநாத் (சூர்யா) என்ட்ரியே அட்டகாசமாக உள்ளது. அவரது அப்பாவாக ராஜீவ் மேனன் நடித்துள்ளார். சிறு வயதில் அப்பா சொல்லிக் கொடுத்த விஷயத்தை ஒலிம்பிக்கில் ஒரு இக்கட்டான சூழல் வரும் போது சூர்யா அதை எப்படி எதிர்கொண்டு சாதிக்கிறார் என்கிற ஓபனிங்கே அருமையாக உள்ளது.

40 பிளஸ் வயது கடந்தும் விஸ்வநாத் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் நிலையில், உடல்நிலை குறைவாக உள்ள அவரது அம்மாவாக ராதிகா சரத்குமார் நடிப்பில் அடிபொலி என சொல்லும் அளவுக்கு அசத்தியுள்ளார்.

மகனை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, உனக்கு ஒரு வாரிசு வேண்டாமா எனக் கேட்க, வாரிசு தானே என வாடகைத் தாய் மூலமாக குழந்தையை ரெடி பண்ணி வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார்.

ஆனால், அதன் பின்னர் குழந்தைக்கு போன் மேரோ அறுவை சிகிச்சை செய்வதற்காக வெளிநாட்டில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் மேடி (மமிதா பைஜு) வர அவருக்கும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம், விஸ்வநாத்துக்கும் மேடிக்கும் இடையே இருக்கும் 20 வருட வயது வித்தியாசம் காரணமாக சூர்யா நோ சொல்ல, சூர்யாவை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தாரா? இல்லையா? என்பது தான் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதை.

படம் எப்படி இருக்கு?: சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமாரின் பாசிட்டிவ் வைப் மற்றும் க்யூட்டான காமெடி காட்சிகள் என முதல் பாதி முழுக்கவே படம் எங்கேயும் டீவியேட் ஆகாமல் ரிச்சான புரொடக்‌ஷன் வேல்யூவுடன் ஒவ்வொரு சீனும் வொர்த்தாகவே உள்ளது.

மேடி கதாபாத்திரத்தில் மமிதா பைஜு நீச்சல் குளத்தில் இருந்து குதித்து எழும் முதல் காட்சியில் இருந்து கடைசி கிளைமேக்ஸ் சீன் வரை இந்த கதாபாத்திரத்துக்கு இவரை விட பொருத்தமானவர் வேறு யாரும் இருக்கமாட்டார் என்பதை நிரூபித்துள்ளார்.

சூர்யா திருமணத்துக்கு நோ சொல்லவும், குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு காசுக்காக வந்த மமிதா பைஜுவை விமான நிலையத்தில் கொண்டு விடும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.

2வது பாதியில் ரவீனா டாண்டன் போர்ஷன் வருவதும் அவருடைய மகளாக வரும் பவானி ஸ்ரீயின் திருமணத்துக்காக சூர்யா செய்யும் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தாலும், முதல் பாதி அளவுக்கு இல்லையே என்கிற உணர்வும் 2வது பாதியில் வேற ஒரு படம் பார்க்கும் உணர்வையும் கடத்துகிறது. அந்த 2வது பாதியில் சூர்யாவுக்கு பதிலாக அங்கே உள்ள சிக்கல்களை மமிதா பைஜுவை வைத்து சற்று சரி செய்திருந்தால் இன்னமும் படம் சிறப்பாக இருந்திருக்கும்.

பிளஸ்: இயக்குநர் வெங்கி அட்லூரி சூர்யாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இல்லாமல் ஃபேமிலி சென்டிமெண்ட் நிறைந்த கதையை கொடுத்தாலும் அவரது ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கிய மாஸ் காட்சிகளும், கடைசி வரை கண்ணியம் தவறாமல் இருக்கும் அளவுக்கு பார்த்துக் கொண்ட விதமும் சிறப்பு. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் புரொடக்‌ஷனுக்கு செலவு செய்திருப்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. பிரைவேட் ஜெட் முதல் சூர்யாவின் வீடு, ஊட்டியில் இருக்கும் பூர்வீக வீடு என அனைத்துமே ராயல் தான்.

முதல் பாதியில் மமிதா பைஜுவின் என்ட்ரி, அந்த காண்டம் காமெடி, மருத்துவமனையில் வரும் எமோஷன் சீன், ஹோட்டலில் நடக்கும் ஃபைட் என ஏகப்பட்ட காட்சிகள் ஃபிரெஷ்ஷாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. ஜி.வி. பிரகாஷ் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒட்டுமொத்த இசையையும் கட் செய்துவிட்டு சூர்யாவின் பர்ஃபார்மன்ஸை மட்டுமே பார்த்து ரசிகர்கள் அழ இடம் கொடுத்த விதம் அருமை. பட்டாம்பூச்சி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு ராயலாகவும் நவீன் நூலியின் எடிட்டிங் கச்சிதமாகவும் படத்தை மெருகேற்றியுள்ளன.

மைனஸ்: முதல் பாதியில் இருந்த அளவுக்கு ஹை மொமண்ட்ஸ் 2வது பாதியில் பெரிதளவு குறைந்து விட்டது. ராதிகாவுக்கு பதில் 2வது பாதியில் ரவீனா டாண்டன் ஸ்கோர் செய்ய இடமிருந்தும் அது பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. முதல் பாதியில் ஒரு ஃபைட் வைத்ததை போலவே 2வது பாதியிலும் ஒரு சண்டைக் காட்சி தேவையில்லாத திணிப்பாகவே இருந்தது. சில குறைகள் இருந்தாலும், பெரிதாக படம் எங்கேயும் போரடிக்காமல் ஒரு பக்காவான குடும்ப உறவுகளின் வேல்யூவை எடுத்துக் காட்டும் படமாக பிராமிஸ் பண்ணதை சூர்யாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் வெங்கி அட்லூரி டெலிவரி செய்துள்ளார். கண்டிப்பாக சூர்யாவுக்கு இது அடுத்த பிளாக்பஸ்டர் தான்.