📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 08, 2026 01:30 PM

3 வருஷம் சோறு போட்டு.. கடைசியில இப்படியா? தமிழ் சீரியலை விட்டு ஓடிய நடிகை.. புலம்பும் முன்னாள் கணவர்

3 வருஷம் சோறு போட்டு.. கடைசியில இப்படியா? தமிழ் சீரியலை விட்டு ஓடிய நடிகை.. புலம்பும் முன்னாள் கணவர்

சென்னை: சினிமாவானாலும் சின்னத்திரையானாலும் காதலும், கல்யாணமும், அப்புறம் வர்ற பஞ்சாயத்தும் புதுசு இல்லைதான். ஆனா, இந்த கன்னட நடிகைக்கும், அந்த 'வாய்க்கொழுப்பு' நடிகருக்கும் இடையே நடந்த மேட்டரை கேட்டாலா அய்யோ பாவம் என்று தான் சொல்லத்தோணும். இப்போ அந்த கன்னட நடிகை தமிழ் சேனலுக்கே கும்மிடுபோட்டுவிட்டு சொந்த ஊருக்கே சென்றுவிட்டாராம்.

கன்னட சீரியல் உலகத்துல இருந்து தமிழ் சின்னத்திரைக்கு இறக்குமதி ஆனவர் தான் அந்த கன்னட நடிகைக்கு சொந்த ஊரிலேயே ஏற்கனவே திருமணமாகி, கணவன், குழந்தை என்று சந்தோஷமா இருந்து இருக்கிறார். இவருக்கு பிரபலமான டிவியில் பிரைம் டைம் சூப்பர் ஹிட் சீரியல்ல லீட் ரோல் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. சென்னைக்கு வந்த நேரம்... சீரியல்ல கூட நடிச்ச அந்த விவகாரமான நடிகரோட நடிகைக்கு காதல் ஏற்பட்டது. இதனால், தனக்கு கல்யாணமானதையும், குழந்தை இருப்பதையும் மறைச்சுட்டு, காதலனோட தனி வீடு எடுத்து குடும்பமே நடத்தி இருக்காங்க. அப்புறம் என்ன... அந்த நடிகருக்கு கையில வேலையும் இல்லாம 3 வருஷமா சும்மா இருந்ததால, இந்த கன்னட நடிகையின் சம்பாத்தியத்துலயே ஜாலியா காலத்தை ஓட்டியிருக்காரு. ஒருகட்டத்துல உண்மையையெல்லாம் மறைச்சு அந்த நடிகரை இரண்டாம் கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க அந்த கன்னட நடிகை.

விவகாரமான பஞ்சாயத்து: கல்யாணத்துக்கு அப்புறம்தான் அந்த நடிகருக்கு ஒரு பெரிய டிவியில சீரியல் வாய்ப்பு வந்துச்சு. வாய்ப்பு வந்ததும் சும்மா இருக்காம, தன்னோட 'வாய்க்கொழுப்பு' வேலையைக் காட்டி, கூட நடிச்ச ஒரு மலையாள நடிகையையும் காதல்ல விழ வச்சுட்டாரு. ரெண்டு பேரும் ஜோடியா சுத்துற விஷயம் கன்னட நடிகையின் காதுக்கு எட்ட, வீட்ல டெய்லி யுத்தம் தான். இதனால் ஸ்மார்ட்ட யோசிச்ச அந்த நடிகர், ஏற்கனவே கல்யாணமானதை மறைச்சிட்டானு மீடியா முன்னாடி பஞ்சாயத்து கூட்டினாரு. பதிலுக்கு கன்னட நடிகையும், இவருக்கு வேற ஒரு நடிகையோட தொடர்பு இருக்கு... அதைத் தட்டிக் கேட்டதுக்கு என்னை அடிச்சாருனு நடிகையும் இறங்கி அடிக்க ஆரம்பிக்க சோசியல் மீடியாவுல செய்தி பத்திக்கிச்சி.

பணக்கார நடிகை தயவில் நடிகர்: இந்த பஞ்சாயத்துக்கு அப்புறம், நடிகை தன் குழந்தையை வச்சுக்கிட்டு தமிழ்ல தொடர்ந்து நடிச்சு வந்தாரு. ஆனா, அண்மையில அந்த சீரியல் முடிஞ்சு கிட்டத்தட்ட ஒரு வருஷமாகியும் தமிழ்ல ஒரு வாய்ப்பும் வரலை. இதனால கடுப்பான நடிகை, போதும்டா சாமி உங்க தமிழ் சீரியல் வாசம்னு மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு திரும்பவும் சொந்த ஊருக்கே ஓடிட்டாங்க. இப்போ கன்னடத்துல ஒரு சீரியல்ல லீட் ரோல்ல நடிச்சுட்டு வராங்க. ஆனா, நம்ம வாய்க்கொழுப்பு நடிகரோட நிலைமை தான் ரொம்ப பரிதாபம். சீரியல் வாய்ப்பு எதுவுமே இல்லாம, உடம்பைக் குறைக்கிறேன், ஏத்துறேன்னு பில்டப் கொடுத்து இப்போ ஆளே எலும்பும் தோலுமா காட்சியளிக்கிறாரு. தனக்கு ஆதரவு கொடுத்த சேனல்லயே வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிட்டாரு. இப்போ அந்த மலையாள நடிகையையும் கழட்டிவிட்டுட்டு, செம பணக்கார நடிகை ஒருத்தரை பிடிச்சு 'ரிலேஷன்ஷிப்'ல இருக்காராம். அந்தப் பணக்கார நடிகையோட ஸ்பான்சர்ஷிப்லதான் வெளிநாட்டு டூர், உள்நாட்டு டூர், ஜிம்னு படு ஜோரா சுத்திட்டு வர்றாராம் அந்த விவகார நடிகர்.