📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 28, 2026 09:01 AM

ஆகாஷ் தீப் 5 விக்கெட்; நியூசி., 356 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆகாஷ் தீப் 5 விக்கெட்; நியூசி., 356 ரன்களுக்கு ஆல் அவுட்

கிறைஸ்ட்சர்ச்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பின் அபாரப் பந்துவீச்சால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

​கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இப்போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. 2ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த நியூசிலாந்துக்கு, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிளின் பிலிப்ஸை(36) அன்ஷுல் கம்போஜ் வெளியேற்றினார்.

​மறுமுனையில் நிலைத்து ஆடிய விக்கெட் கீப்பர் டாம் பிளண்டெல் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் நாதன் ஸ்மித் (26), கைல் ஜேமிசன் (19) ஓரளவு ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் குர்னூர் பிரார், அன்ஷுல் கம்போஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 116.3 ஓவர்களில் நியூசிலாந்து 356 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்குகிறது.