📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 28, 2026 09:01 AM

உதயநிதி பிறந்த நாள் விழா

உதயநிதி பிறந்த நாள் விழா

திண்டுக்கல்: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதியின் 50வது பிறந்த நாள் விழா திண்டுக்கல் மாநகர இளைஞரணி சார்பில் அரசு தலைமை மருத்துவ மனையில் நடந்தது.

இதில் பிரியாணி விருந்து வழங்கப் பட்டது. மாநகர அமைப்பாளர் ரகுமான் தலைமை வகித்தார். மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநகர துணைச் செயலாளர் முகமதுசித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விருந்தை ஆதவன் உலக தமிழ்ச்சங்க இயக்குநர் செந்துார் ஆதவன் துவக்கி வைத்தார்.

மாவட்ட துணைச்செயலாளர் பிலால் உசேன், மாநகர பொருளாளர் சரவணன், பகுதி பொறுப்பாளர்கள் ராஜேந்திரகுமார், சூசை ராபர்ட், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மண்டல தலைவர் ஜான்பீட்டர், மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள்வாணி, ஆரோக்கிய செல்வி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான்பாபு, இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.