📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 02, 2026 07:01 PM

ஆப்பிரிக்காவில் தமிழ் மாணவர் சாதனை

ஆப்பிரிக்காவில் தமிழ் மாணவர் சாதனை

ஆப்பிரிக்காவில் தமிழ் மாணவர் சாதனைதமிழ்நாட்டில் மதுரை மண்ணில் பிறந்து தான்சானியாவில் வசித்து வரும் புரூஸ் லீ ரூபன் ஜெயசுந்தரி புதல்வனாகிய இளம் தமிழ் மாணவர் எட்கர் ஷாயோ. 15 வயதான எட்கர் ஷாயோ தான்சானியாவில் கல்வி பயின்று, மதுரை குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியில் மேற்படிப்பு படித்து வருகிறார். திரைப்படத் துறையில் ஆர்வமும் படைப்பாற்றலும் கொண்ட எட்கர் ஷாயோ, தனது திரைப்படக் குழுவினருடன் இணைந்து “THE LAST SEED” என்ற குறும்படத்தை உருவாக்கியுள்ளார்.Edgar Shayo Production சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படம், இளம் தலைமுறையின் சிந்தனை, திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.இளம் வயதிலேயே கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட திரைப்பட உருவாக்கத்தின் பல்வேறு அம்சங்களில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் எட்கர் ஷாயோ, தனது நண்பர்கள் மற்றும் திரைப்படக் குழுவினரின் ஒத்துழைப்புடன் THE LAST SEED படைப்பை உருவாக்கியுள்ளார்.மதுரையில் பிறந்து தான்சானியாவில் வளர்ந்து வரும் ஒரு தமிழ் மாணவர், தனது திறமையை குறும்படம் மூலம் உலகிற்கு வெளிப்படுத்துவது பெருமைக்குரிய முயற்சியாகும். இவரது படைப்புப் பயணம் தான்சானியாவில் உள்ள தமிழ் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சிறந்த ஊக்கமாக அமையும்.“THE LAST SEED” - எட்கர் ஷாயோவின் திரைப்பயணத்தில் ஒரு சிறப்பான முதல் அடியாகும்.- தான்சானியாவில் இருந்து புரூஸ்லீ ரூபன்