📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 27, 2026 11:32 AM

“சிராஜ், ஷமி, ஜடேஜா நீக்கத்தை ஏற்கிறேன் ஆனா..” கம்பீரை நோக்கி உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர் கேள்வி

“சிராஜ், ஷமி, ஜடேஜா நீக்கத்தை ஏற்கிறேன் ஆனா..” கம்பீரை நோக்கி உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர் கேள்வி

“சிராஜ், ஷமி, ஜடேஜா நீக்கத்தை ஏற்கிறேன் ஆனா..” கம்பீரை நோக்கி உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர் கேள்வி

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வரும் சூழலில், இந்திய அணி நிர்வாகத்தின் பந்துவீச்சு திட்டம் குறித்து 2011 உலகக்கோப்பை வென்ற முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அனுபவ பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை ஓரம் கட்டியதை சுட்டிக் காட்டி அவர் பயிற்சியாளர் கம்பீருக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முனாப் படேல், "சரி, முகமது சிராஜ், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு டெஸ்ட் போட்டியை நமக்கு வென்று கொடுக்கும் அளவுக்கு தகுதியான அடுத்த தலைமுறை பந்துவீச்சு கூட்டணி எங்கே இருக்கிறது?" என்று நேரடியாக கேட்டுள்ளார்.

டெஸ்ட் அணியில் இருந்து நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டதால் முகமது ஷமி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். வெலிங்டன் டெஸ்டில் 352 ரன்கள் முன்னிலை பெற்றும் அனுபவ பந்துவீச்சாளர்கள் இல்லாததால் இந்தியாவால் எதிரணியின் 10 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெற முடியவில்லை. கிறைஸ்ட்சர்ச்சிலும் 48 டெஸ்டுகளில் 144 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 91 டெஸ்டுகளில் 356 விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜாவும் அணியில் இல்லை. இங்கிலாந்து மண்ணில் கடந்த முறை 23 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜை, தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் சேர்க்காதது ரசிகர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பும்ராவுடன் ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ் மற்றும் அறிமுக வீரர் குர்னூர் ப்ரார் என அனுபவமற்ற இளம் பந்துவீச்சாளர்களையே இந்தியா நம்பியுள்ளது. கிறைஸ்ட்சர்ச் போட்டியில் நியூசிலாந்து அணி 110 ரன்னில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தேநீர் இடைவேளையின் போது 132 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. எனினும், வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வெல்ல அனுபவ பந்துவீச்சாளர்கள் அவசியம் என்றும், எதிர்கால திட்டமிடல் இல்லாமல் சீனியர்களை ஓரங்கட்டுவது ஆபத்தானது என்றும் முனாப் படேல் எச்சரித்துள்ளார்.