📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 26, 2026 08:04 PM

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சமையல்காரருக்கு 8½ ஆண்டுகள் சிறை

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சமையல்காரருக்கு 8½ ஆண்டுகள் சிறை

உணவகத்தில் 11 வயதுச் சிறுமியை ஏறக்குறைய அரை மணி நேரம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய தலைமைச் சமையல்காரர் ஒருவருக்குப் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) 8½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் இருந்தபோதே, அவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

63 வயது காசிம் ஜுஹாமத் என்ற அந்தச் சமையல்காரர், அந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் சம்பவம் நடந்தது. காசிம் மீது மூன்று பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிறுமியை மானபங்கப்படுத்தியது தொடர்பான இரு குற்றச்சாட்டுகள், அவரிடம் ஆபாசமான செயலில் ஈடுபட்டதற்கான ஒரு குற்றச்சாட்டு என மூன்றும் காசிமுக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது கருத்தில் கொள்ளப்பட்டன.

காசிமுக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் பிரம்படி கொடுக்க முடியாது. அதற்குப் பதிலாக அவருக்கு விதிக்கப்பட்ட சிறைக்காலத் தண்டனையில் மேலும் ஆறு மாதம் சேர்க்கப்பட்டுள்ளது.

உணவகத்தின் மேலாளர்களில் ஒருவர் நடந்ததை அறிந்து, சிறுமியின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கைது செய்யப்பட்ட காசிம், அன்றிலிருந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.