📅 Thursday, 26 November 2026 IST | கார்த்திகை 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 26, 2026 05:03 PM

சக விமானப் பயணியைத் தாக்கியவர் கைது

சக விமானப் பயணியைத் தாக்கியவர் கைது

கொச்சி: அபுதாபியிலிருந்து கொச்சி சென்ற ’இண்டிகோ’ விமானத்தில் சக பயணியைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரைக் காவல்துறையினர் கைது செய்ததாக புதன்கிழமை தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு ஏறக்குறைய 7 மணியளவில் (6இ1404) விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள வைட்டிலாவைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட ரோஷன் மார்ட்டின், திருச்சூரைச் சேர்ந்த யூசுஃப் என்பவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

நெடும்பாசேரி காவல்துறையின் கூற்றுப்படி, மார்ட்டின் யூசுஃபின் முகத்தில் குத்தியதில் அவரது மூக்குக்கண்ணாடி உடைந்து, வலது கண்ணுக்கு அருகே காயம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின்போது அவர் தமது இடுப்புப் பட்டையைக் கழற்றி யூசுஃபின் கழுத்தை இறுக்கியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதல் தகவல் அறிக்கையின்படி, சம்பவம் நடந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர் 30டி இருக்கையிலும், யூசுஃப், 31பி இருக்கையிலும் அமர்ந்திருந்தனர். புகாரின் அடிப்படையில் மார்ட்டினைக் கைது செய்த காவல்துறையினர், அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

புகார்தாரரின் வாக்குமூலத்தை விரைவில் பதிவு செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.