📅 Thursday, 26 November 2026 IST | கார்த்திகை 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 25, 2026 08:32 AM

சுரேஷ் ரெய்னாவின் யாராலும் தொட முடியாத 12 ஆண்டுகால சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

சுரேஷ் ரெய்னாவின் யாராலும் தொட முடியாத 12 ஆண்டுகால சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

சுரேஷ் ரெய்னாவின் யாராலும் தொட முடியாத 12 ஆண்டுகால சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

தோஹா: ஆசியா கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில், யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் 250 ரன்கள் என்ற இலக்கை இந்தியா ஏ அணி துரத்தியது. அப்போது, 15 வயதான தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்து புதிய சரித்திரம் படைத்தார்.

இந்த பிரம்மாண்டமான ஆட்டத்தின் மூலம் இந்தியா ஏ அணி 14.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. வைபவ் சூர்யவன்ஷியின் இந்த வெளுத்து வாங்கிய ஆட்டம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவின் பெயரையும் திடீரென ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தது.

வைபவ் சூர்யவன்ஷி தனது அரைசதத்தை 16 பந்துகளிலும், சதத்தை 28 பந்துகளிலும் எட்டினார். இவர் ஆடிய விதம், 2014-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா பஞ்சாப் அணிக்கு எதிராக 25 பந்துகளில் 87 ரன்கள் விளாசிய வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை ரசிகர்களுக்கு நினைவூட்டியது.

2014 ஐபிஎல் இரண்டாவது தகுதிப் போட்டியில் 227 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி சிஎஸ்கே களம் இறங்கியபோது, ரெய்னா பவர் பிளே ஓவர்களில் அதிரடி காட்டினார். வெறும் 16 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 348 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார். பவர் பிளே முடிவில் சிஎஸ்கே 100 ரன்களை எட்டியது. அதில் ரெய்னாவின் பங்களிப்பு 87 ரன்கள் ஆகும். பவர் பிளேக்கு பிறகு அவர் ரன் அவுட் ஆனார்.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டத்தில், எந்தவொரு 25 பந்துகள் கொண்ட வரிசையை எடுத்துக்கொண்டாலும், அவர் ரெய்னாவின் 87 ரன்களை விட அதிகமாகவே ரன்கள் குவித்துள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ரெய்னாவின் 2014 இன்னிங்ஸையும், வைபவின் இந்த சாதனை ஆட்டத்தையும் ஒப்பிட்டுப் பதிவிட்டு வருகின்றனர். ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்கள் அடித்த நிலையில், வைபவ் எந்த ஒரு 25 பந்துகளை எடுத்து கொண்டாலும் 89 ரன்கள் அடித்து 12 ஆண்டுக்கால சாதனையை முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, அதே நாளில் இந்தூரில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யா, தமிழ்நாட்டிற்கு எதிராக 181 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் சாதனையைப் படைத்திருந்தார். ஆனால், மாலையில் தோஹாவில் வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய இந்த அசாத்தியமான இன்னிங்ஸ் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.