📅 Friday, 21 August 2026 IST | ஆவணி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 20, 2026 11:01 PM

ஈரானுக்கு ஆதரவளிக்கும், வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் எந்த நாடானாலும் கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் கடும் எ

ஈரானுக்கு ஆதரவளிக்கும், வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் எந்த நாடானாலும் கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் கடும் எ

ஈரானுக்கு ஆதரவளிக்கும், வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் எந்த நாடானாலும் கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானுக்கு ஆதரவளிக்கும் மற்றும் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் எந்த ஒரு நாடும் கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மோதல் நீடித்து வந்தது. கடந்த பிப்ரவரி முதல் நடந்து வரும் இந்த மோதலை தொடர்ந்து, போடப்பட்டிருந்த 60 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் அண்மையில் முடிவுக்கு வந்தது. ஈரான் புதிய உடன்படிக்கைக்கு உடன்பட மறுத்ததால் அந்நாட்டிற்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கான வாய்ப்புகளை ஈரான் பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டது. ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத வகையிலான மிக கடுமையான “பொருளாதார டி-டே” (பொருளாதார போர் மற்றும் தனிமைப்படுத்தல்) நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

ஈரானின் நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகளுக்கு எந்த வடிவத்திலாவது உதவி வழங்கும் நாடுகள் அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஈரானுடன் தொடர்ந்து வணிகம் செய்யும் நாடுகளுக்கு, அவை அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் அனைத்து வர்த்தகங்கள் மீதும் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்கா அல்லது ஈரான் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நாட்டை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஈரானுக்கு மறைமுகமாக உதவும் நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் மூலம் ஈரானுக்கு “வாழ்வாதார உதவி” அளிக்கும் எந்தவொரு நாடும் “மிகப்பெரிய பொருளாதார விளைவுகளை” சந்திக்க நேரிடும்.

குறிப்பாக, கச்சா எண்ணெய் இறக்குமதி, நாணய பரிமாற்றம், பண பரிமாற்றம், கப்பல் வணிகம் மற்றும் ஈரானுடன் தொடர்புடைய பினாமி நிறுவனங்களின் பயன்பாடு ஆகியவற்றை நிறுத்த வேண்டும். ஈரானின் அச்சுறுத்தலை தனிமைப்படுத்தி முறியடிக்க, அமெரிக்காவுடன் எங்கள் நட்பு நாடுகள் அனைத்தும் துணை நிற்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் உலகம் முழுவதும் “பயங்கரவாதத்தை பரப்பும்” ஈரானின் திறனை முடக்கிவிடும். தெஹ்ரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை பெற அனுமதிக்கப்படாது’ என்று தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த திடீர் அறிவிப்பால் சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற ஈரானுடன் பரஸ்பர வர்த்தக அல்லது எரிசக்தி தொடர்பு கொண்டுள்ள முக்கிய நாடுகளின் உலகளாவிய வினியோகம் மற்றும் எரிசக்தி சந்தை பெரும் பாதிப்பை சந்திக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஹார்முஸை அமெரிக்க பகுதியாக அறிவித்த டிரம்புக்கு பதிலடி

ஈரான்-அமெரிக்கா இடையே போருக்கு மத்தியில் ஹார்முஸ், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அதை அமெரிக்காவின் ஒரு பிராந்திய பகுதி என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தனது சமூக வலைதளத்தில் வரைபடம் வெளியிட்டு அறிவித்தார். பின்னர், அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கும் இந்த படத்தை மறுபதிவு செய்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கவின் முக்கிய மாகாணங்களுள் ஒன்றான கலிபோர்னியா மாகாணத்தை, ஈரானின் ஒரு பிராந்திய பகுதி என்று சித்தரித்து ஈரான் வரைபடம் வெளியிட்டுள்ளது. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், ‘கலிபோர்னியா மாநிலத்தை நீல நிறத்தில் பளிச்சிடும் வகையில் குறிப்பிட்டு, அதை “இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய பிராந்தி பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது.