பிக் பாஸ் 10ல் முன்னாள் CSK வீரர், குரேஷி, பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை?: மாதம்பட்டி ரங்கராஜ் பொண்டாட்டியுமா!
பிக் பாஸ் 10, காமன்மேன்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதாவது செப்டம்பர் 6ம் தேதி துவங்கவிருக்கிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் அந்த நிகழ்ச்சியின் கிராண்ட் லான்ச் மாலை 6 மணிக்கு நடக்கும் என தொடர்ந்து ப்ரொமோ வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.நிகழ்ச்சியை விட ப்ரொமோ தான் சூப்பராக இருக்கும் என்பார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் 10வது சீசன் துவங்கப் போவது குறித்த ப்ரொமோ வீடியோக்கள் நிஜமாகவே வேற லெவலில் இருக்கிறது. பொது மக்களில் இருந்து 3 பேரை போட்டியாளராக தேர்வு செய்ய பிக் பாஸ் தி காமன்மேன் நடத்தினார்கள்.50 பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் சினிமா தயாரிப்பாளர் கரிஷ்மா, யூடியூப் பிரபலம் முனியம்மா, உதவி இயக்குநர் ஜேசன் ஆகியோரை பிக் பாஸ் 10 போட்டியாளர்களாக தேர்வுசெய்திருக்கிறார்கள். காமன்மேன் என பெயர் வைத்துவிட்டு காமன்மேன் இல்லாத மூன்று பேரை தேர்வு செய்திருப்பது நியாயம் இல்லை பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.முரளி விஜய், குரேஷி: இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபலங்கள் சிலரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வரத் துவங்கியிருக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முரளி விஜய்யின் பெயரும் இருக்கிறது. முரளி விஜய் வந்தால் சி.எஸ்.கே. ஆதரவாளர்களின் கவனம் பிக் பாஸ் பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.டிவி சீரியல் ஆட்களை அழைத்து வருவது வழக்கமானது தான். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஹேமா ராஜ்குமார் வருகிறாராம். அது மட்டும் அல்ல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து குரேஷி, டாலி ஆகியோரையும் பிக் பாஸ் வீட்டில் பார்க்கலாம் என்கிறார்கள்.மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடுவர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியான ஜாய் கிரிசில்டாவும் போட்டியாளராம். மகன் ராகா ரங்கராஜுக்கு ஒரு வயது கூட ஆகாத நிலையில் குழந்தையை விட்டுவிட்டு ஜாய் எப்படி வருவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஜாய் வந்தால் குரேஷி இருப்பதால் மோதல் ஏற்படும் என்று நம்புகிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜுடன் பிரச்சனையாக இருந்தபோது ஜாய் கிரிசில்டா வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலானது. ஏய் பொண்டாட்டினு ஜாயை அவர் கொஞ்சிய வீடியோ மாதிரியே குரேஷியும் ஒரு வீடியோ வெளியிட்டார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜாய் பெயரை சொல்லாமல் மாதம்பட்டி ரங்கராஜை பயங்கரமாக கலாய்த்துக் கொண்டே இருந்தார் அவர். அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் குரேஷியும், ஜாயும் தங்கினால் நிச்சயம் சண்டை வரும் என்று பேசப்படுகிறது.இந்த சீசனில் இவர் நிச்சயம் கலந்து கொள்வார் என ஆல்யா மானசாவின் பெயரும் அடிபடுகிறது. மேலும் தேவயாணியின் மூத்த மகள் இனியாவை 10வது சீசனில் பார்க்க முடியும் என்கிறார்கள்.சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்விஜி வரலாமே: இதற்கிடையே சிலரோ நடிகை விஜயலட்சுமியின் பெயரை பரிந்துரை செய்துள்ளனர். இத்தனை நாட்களாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விளாசி வந்தவர், தற்போது தவெகவினரை வந்து பார் என சவால் விட்டிருக்கிறார். அவரை பிக் பாஸ் வீட்டில் தங்க வைத்தால் டி.ஆர்.பி. டாப்பில் இருக்கும் என்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் அக்காவை விட்டுவிட்டு அவர் வர வாய்ப்பில்லை.