📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 30, 2026 11:04 AM

Hi Day 2 Box Office - கவின்

Hi Day 2 Box Office - கவின்

சென்னை: விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஹாய். நேற்று முன்தினம் வெளியான படத்துக்கு விமர்சன ரீதியாக ஓரளவுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அதன் வசூலும் நன்றாகவே இருப்பதாக Sacnilk இணையதளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று அந்தப் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த கவின்; டாடா படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அவ்வெற்றிக்கு பிறகு அவர் நடித்த ஸ்டார்,கிஸ், மாஸ்க், ப்ளடி பெக்கர் என நான்கு படங்களுமே சரியாக போகவில்லை. இதன் காரணமாக அவருக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவைப்பட்டது. அந்தச் சூழலில் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக வேலை செய்த விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் படத்தில் நடிக்க கமிட்டானார்.

ஜோடி நயன்தாரா: இதில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, ராதிகா, பாக்யராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக நயனுடன் ஜோடி சேர்ந்திருப்பது கவினின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முக்கியமாக கவினேகூட ஒரு மேடையில், 'நயன் நடித்த யாரடி நீ மோகினி படத்தை திருச்சியில் கூட்டத்தில் அமர்ந்து பார்த்தேன். ஆனால் அவருடனேயே நடிப்பேன் என்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை' என பெருமையோடு பகிர்ந்திருந்தார்.

நேற்று முன்தினம் ரிலீஸ்: படத்தின் ட்ரெய்லர், போஸ்டர்கள் எல்லாம் இதன் மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பின. கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியே படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வந்தது. சூர்யாவுடன் எதற்கு போட்டி என்று முடிவு செய்து 28ஆம் தேதிக்கு படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தார்கள். அறிவித்த்படியே நேற்று முன்தினம் தியேட்டர்களில் படம் கோலாகலமாக ரிலீஸானது. கவின் ரசிகர்களும் நிறைய பேர் சென்று பார்த்து ரசித்தார்கள்.

எப்படி இருக்கு படம்?: படம் ஓரளவுக்கு ரசிகர்களால் கவரப்பட்டிருக்கிறதுதான். வழக்கமான காதல் கதைதான் என்றாலும் விஷ்ணுவின் மேக்கிங் தப்பிக்க வைத்துவிட்டதாக கருதுகிறார்கள். குறிப்பாக நயன் - கவின் கெமிஸ்ட்ரியும் ஈர்க்கத்தான் செய்திருக்கிறது. அதேசமயம் சிலரோ, அவர்கள் இரண்டு பேரை பார்க்கையில் ஹீரோ, ஹீரோயின் மாதிரி தெரியவில்லை; அக்கா - தம்பி மாதிரி இருப்பதாக கலாய்க்கவும் தவறவில்லை. அது பெரிதாக எடுபடவில்லை. ஆகமொத்தம் விமர்சன ரீதியாக படம் ஓகேயான ரெஸ்பான்ஸை பெற்றுவிட்டது.

வசூல் நிலவரம்: இந்நிலையில் அந்தப் படத்தின் வசூல் குறித்த விவரங்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல் நாளில் 1 கோடியே 25 லட்சம் ரூபாயை வசூலித்ததாம். தொடர்ந்து பாசிட்டிவ் பேச்சுக்கள் படத்தை சுற்றி எழுந்ததாலும்; நேற்று விடுமுறை நாள் என்பதாலும் கூட்டம் நன்றாகவே கூடியது. அதன் பலனாக இரண்டாவது நாளான நேற்று இரண்டு கோடியே 15 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். மொத்தம் இரண்டு நாட்கள்ல் அந்தப் படம் 3 கோடியே 40 லட்சம் ரூபாயை பாக்ஸ் ஆஃபிஸில் வசூலித்திருக்கிறது. இன்றும் விடுமுறை என்பதால் கூட்டம் மேற்கொண்டு அதிகரித்து வசூலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.