📅 Tuesday, 24 November 2026 IST | கார்த்திகை 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 24, 2026 06:31 PM

உலக செஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்.. பட்டத்தை தக்கவைப்பாரா குகேஷ்.. நேரம்? அட்டவணை விவரம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்.. பட்டத்தை தக்கவைப்பாரா குகேஷ்.. நேரம்? அட்டவணை விவரம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்.. பட்டத்தை தக்கவைப்பாரா குகேஷ்.. நேரம்? அட்டவணை விவரம்

ஜெனீவா: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நவம்பர் 24 இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ், கேண்டிடேட்ஸ் தொடரின் வெற்றியாளரான உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவை எதிர்கொள்கிறார். 20 வயதான இரு இளம் வீரர்கள் மோதும் இந்தப் போட்டி, உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் நடைபெறும் மோதலாகும்.

குகேஷ் 2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அப்போதைய சாம்பியன் டிங் லிரேனை 7.5-6.5 என்ற கணக்கில் வீழ்த்தி, செஸ் வரலாற்றில் 18-வது மற்றும் மிக இளைய உலக சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது அவர் முதன்முறையாக இப்போட்டியில் களமிறங்கும் சிந்தரோவுக்கு எதிராகத் தனது பட்டத்தைத் தக்கவைக்க முயல்வார்.

நவம்பர் 24 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடர் மொத்தம் 14 சுற்றுகளை கொண்டது. தேவைப்பட்டால் வெற்றியாளரைத் தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்றுகள் நடத்தப்படும். ஒரு சுற்றில் வெற்றி பெற்றால் ஒரு புள்ளி கிடைக்கும். சமனில் முடிந்தால் இரு பிரிவுக்கும் அரை புள்ளிகள் கிடைக்கும், முதலில் யார் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்களே சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள். ஒரே வேலை இருவரும் 7 புள்ளிகள் பெற்றால், சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்க டை பிரேக் முறை கடைபிடிக்கப்படும்.

இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்குகின்றன. நவம்பர் 24 அன்று முதல் போட்டியும், நவம்பர் 25 அன்று இரண்டாவது போட்டியும், நவம்பர் 26 அன்று மூன்றாவது போட்டியும் நடைபெறுகின்றன. தொடர்ந்து நவம்பர் 27 அன்று வீரர்கள் ஓய்வு நாளாக அமையும்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 28 அன்று 4-வது போட்டியும், நவம்பர் 29 அன்று 5-வது போட்டியும், நவம்பர் 30 அன்று 6-வது போட்டியும் நடைபெறும். டிசம்பர் 1 அன்று ஓய்வு நாளாகும். பின்னர் டிசம்பர் 2 அன்று 7-வது போட்டி, டிசம்பர் 3 அன்று 8-வது போட்டி, டிசம்பர் 4 அன்று 9-வது போட்டி ஆகியவை நடைபெறவுள்ளன. டிசம்பர் 5 மீண்டும் ஓய்வு நாளாகும்.

தொடர்ந்து டிசம்பர் 6 அன்று 10-வது போட்டியும், டிசம்பர் 7 அன்று 11-வது போட்டியும், டிசம்பர் 8 அன்று 12-வது போட்டியும் நடைபெறும். டிசம்பர் 9 ஓய்வு நாளுக்குப் பிறகு, டிசம்பர் 10 அன்று 13-வது போட்டியும், டிசம்பர் 11 அன்று 14-வது போட்டியும் நடைபெறவுள்ளன. 14 சுற்றுகளின் முடிவில் வெற்றி தீர்மானிக்கப்படாவிட்டால், சாம்பியனைத் தேர்வு செய்ய டிசம்பர் 12 அன்று டைபிரேக்கர் சுற்றுகள் நடத்தப்படும்.