📅 Tuesday, 24 November 2026 IST | கார்த்திகை 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 24, 2026 06:31 PM

வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் இரட்டை சதம் விளாசி உலக சாதனை.. தனி ஆளாக 28 சிக்சர் விளாசி வெறித்தனம்

வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் இரட்டை சதம் விளாசி உலக சாதனை.. தனி ஆளாக 28 சிக்சர் விளாசி வெறித்தனம்

வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் இரட்டை சதம் விளாசி உலக சாதனை.. தனி ஆளாக 28 சிக்சர் விளாசி வெறித்தனம்

தோஹா: ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம் ஆடி புதிய வரலாறு படைத்துள்ளார். வெறும் 52 பந்துகளில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம், அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய ஏ அணியில், வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். 28 பந்துகளில் சதமடித்த அவர், 40 பந்துகளில் 150 ரன்களையும், 52 பந்துகளில் இரட்டைச் சதத்தையும் எட்டினார்.

இறுதியாக 53 பந்துகளில் 204 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாசில் ஹமீத் பந்துவீச்சில் ஆரியான்ஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 12.5 ஓவர்கள் முடிவில் இந்திய ஏ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்து வெற்றிக்கு மிக அருகில் வந்தது. வைபவ் சூர்யவன்ணி தனது இன்னிங்சில் மொத்தம் 28 சிக்சர்களை விளாசி, யாரும் நினைக்காத ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை விரைவாக இழந்த போதிலும், ஹர்பிரீத் சிங் பாட்டியா அபாரமாக விளையாடி 130 ரன்கள் குவித்தார். முஹம்மது ஷதாத், ஈதன் டிசௌசா மற்றும் பாசில் ஹமீத் ஆகியோருடன் இணைந்து அவர் முக்கிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை நல்ல நிலைக்கு உயர்த்தினார்.