📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 26, 2026 05:03 PM

2 விக்கெட் கீப்பர்கள் இருக்கும் போதே இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுக்க துடிக்கும் இஷான் கிஷன்

2 விக்கெட் கீப்பர்கள் இருக்கும் போதே இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுக்க துடிக்கும் இஷான் கிஷன்

2 விக்கெட் கீப்பர்கள் இருக்கும் போதே இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுக்க துடிக்கும் இஷான் கிஷன்

மும்பை: இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்ப ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன். தனக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். துலீப் கோப்பை தொடரில் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி, வடகிழக்கு மண்டலத்தை இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஷான் கிஷன், "டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய எவரும் இந்த கிரிக்கெட்டைத் தான் அதிகம் விரும்புவார்கள். மக்கள் என்னை நம்ப மறுக்கிறார்கள், ஆனால் எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் என்பதே எனது 100 சதவீத இலக்கு" என்று கூறினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு, இஷான் கிஷனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து பாதியிலேயே விலகிய அவர், ரஞ்சி கோப்பை போட்டிகளையும் தவிர்த்தார். இதனால் அவர் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் தேவையான சவால்கள் குறித்துப் பேசிய இஷான் கிஷன், "மைதானத்தில் பந்து ஸ்விங் ஆகும் போது, எதிரணி வீரர்கள் நமக்கு நெருக்கடி கொடுப்பதும், மைதானத்தில் அவர்களுக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான உரையாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த சவால்களை நான் எப்போதும் ரசித்து விளையாடுவேன்" என்று தெரிவித்தார்.

தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில், உள்நாட்டுப் போட்டிகளில் மீண்டும் விளையாடத் தொடங்கியுள்ள இஷான் கிஷன் தனது சிறப்பான ஆட்டத்தால் மற்றவர்களை முந்தி அணியில் நுழைய கடுமையாக உழைத்து வருகிறார். அவர்கள் இருவரை தாண்டி இஷான் கிஷன் டெஸ்ட் அணிக்குள் நுழைவது தற்போதைய சூழலில் கடினமே.