PM Modi: மீண்டுமா..! தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்
PM Modi: மீண்டுமா..! தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள் - கிர்கிஸ்தானிலிருந்து மோடி கோரிக்கை
PM Modi On GDP: இந்தியர்கள் தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாதீர்கள் என, கிர்கிஸ்தானிலிருந்து பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
PM Modi On GDP: உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் மேம்படும் என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கோரிக்கை:
நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவிகிதமாக பதிவாகியுள்ளதை குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளிப்பதை மக்கள் மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கிர்கிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்தபடியே இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பெருமிதம்
தங்கம் வாங்க வேண்டாம் என மோடி கோரிக்கை
பொருட்கள் வாங்கும்போதும், பயணம் செய்யும்போதும் சுதேசி (உள்ளூர்) பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு பிரதமர் மோடி இந்தியர்களுக்கு கோரிக்கை விதித்துள்ளார். மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன்பு விடுத்த தனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்திய மோடி, ”போர் தொடர்பான அதிர்ச்சிகளிலிருந்து இந்தியா மீண்டுவர உதவும் வகையில், வெளிநாட்டுப் பயணங்களையும் தேவையற்ற தங்கக் கொள்முதல்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும். சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாதீர்கள். வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவதை கைவிடுங்கள். இந்தியாவிலேயே திருமணம் என்ற தாரக மந்திரத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்” என மோடி வலியுறுத்தியுள்ளார்,
உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம்:
சுதேசித் தன்மையை வலியுறுத்திப் பேசிய அவர், நாம் எந்த அளவிற்கு உள்ளூர் தயாரிப்புகளையும் சேவைகளையும் தேர்ந்தெடுக்கிறோமோ, அந்த அளவிற்கு இந்தியா முன்னேறும் என்றார். நாம் சுயசார்பை தொடர்ந்து வலியுறுத்தினால், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை எட்டும்போது, வளர்ச்சி பெற்ற இந்தியாவை நமது இளைஞர்களிடம் ஒப்படைப்போம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என கூறினார். மேலும்., "நமது கடின உழைப்பின் மூலம் இன்றைய இளைஞர்களின் கனவுகளை நாம் நனவாக்குவோம். நமது கொள்கை சரியானது. நமது நோக்கம் தெளிவானது. மேலும், இன்று ஒன்றுபட்ட 140 கோடி நாட்டு மக்களின் சக்தி, நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்கிறது” என பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படியுங்கள்: Car Loan: கார் லோன் வாங்குறீங்களா? பல ஆயிரங்களை சேமிப்பதற்கான டிப்ஸ் - யாருக்கு எவ்வளவு லோன் கிடைக்கும்?
மே மாத தொடக்கத்தில், சர்வதேச மோதல்களால் ஏற்படும் விநியோகச் சங்கிலி பிரச்னைகள், விலை உயர்வு மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றைச் சமாளிக்க இந்தியாவிற்கு உதவ நாட்டு மக்களுக்கு வலியுறுத்தினார். அப்போது முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறும், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி