📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 26, 2026 11:34 PM

எம்எல்ஏ விவகாரத்தில் துணைபோக மாட்டோம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி

எம்எல்ஏ விவகாரத்தில் துணைபோக மாட்டோம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி

எம்எல்ஏ விவகாரத்தில் துணைபோக மாட்டோம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி

தர்மபுரி: தர்மபுரி யில் அமைச்சர் வன்னியரசு நேற்று அளித்த பேட்டி: பெண் கலெக்டர் புகார் கொடுத்த உடனே, எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால், எப்ஐஆர் போடாமல் கூட தவிர்த்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு எவ்வித பாகுபாடும் இல்லாமல், முழுமையாக யார் தவறு செய்தாலும், அந்த தவறை ஏற்றுக்கொள்ளாமல், அது தவறு என்று சொல்லக்கூடிய அரசு தான் தவெக அரசு. அந்த வகையில், நீதியரசர் லட்சுமி நாராயணன் உத்தரவின் அடிப்படையில், விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

எப்ஐஆர் போடப்பட்டிருக்கிறது. விசாரணை முடிந்த பிறகு, அதை விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சொல்லி, நீதிமன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவிதமான தவறுக்கும், யாரும் உடன்பட மாட்டோம். உறுதுணையாக இருக்க மாட்டோம் என்பது தான், இந்த பிரச்னையின் தொடக்கத்தில் இருந்தே, விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு. சரியான முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.