Politics
August 01, 2026 10:33 AM
மோடி, அமித் ஷா கடந்த காலத்தை சேர்ந்தவர்கள் ராகுல் தாக்கு
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “ஜென் ஸி தலைமுறையினரை பிரதமர் மோடி, அமித் ஷா மிரட்டி அமைதியாக்க முடியாது. முதலில் நீங்கள் அவர்களின் எலும்புகளை உடைத்தீர்கள். இப்போது அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து, அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்குகிறீர்கள்.
ஜென் ஸி இளம் தலைமுறையினரை நீங்களும், அமைச்சர் அமித் ஷாவும் மிரட்டுகின்றனர். நீங்கள் இருவருமே இந்தியாவின் கடந்த காலம். இந்தியாவின் எதிர்காலத்தை கையாளும் விதத்தில் நீங்கள் இருவரும் கவனமாக இருக்க வேண்டும்” என அறிவுரை கூறி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Politics