📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Australia Tamil November 24, 2026 11:32 PM

“முதல் டெஸ்டிலேயே ஆஸ்திரேலியா ஏமாற்றினார்கள்”.. ஆஸ்திரேலிய அணியை வெளுத்து வாங்கிய டி வில்லியர்ஸ்

“முதல் டெஸ்டிலேயே ஆஸ்திரேலியா ஏமாற்றினார்கள்”.. ஆஸ்திரேலிய அணியை வெளுத்து வாங்கிய டி வில்லியர்ஸ்

“முதல் டெஸ்டிலேயே ஆஸ்திரேலியா ஏமாற்றினார்கள்”.. ஆஸ்திரேலிய அணியை வெளுத்து வாங்கிய டி வில்லியர்ஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உலுக்கி வரும் 2018 சான்ட்பேப்பர் பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில், முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய அணியில் இருந்த அனைவருக்கும் நன்றாகவே தெரியும் என்றும், இந்த மோசடி அப்போதைய தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே தொடங்கிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கேப்டவுன் நகரில் நடந்த 3வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் தண்டனை பெற்றனர். ஆனால் உஸ்மான் கவாஜா மற்றும் பான்கிராப்ட் ஆகியோர், போர்ட் எலிசபெத்தில் நடந்த 2வது டெஸ்டிலும் பந்து சேதப்படுத்தப்பட்டதாக அண்மையில் கூறியிருந்தனர். இந்நிலையில், அதற்கு முன்பாக டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆஸ்திரேலியா முறைகேட்டில் ஈடுபட்டதாக டி வில்லியர்ஸ் தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய டி வில்லியர்ஸ், "ஆஸ்திரேலிய அணியினர் ஏதோ ஒரு தவறை செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் விவாதிக்க எதுவுமே இல்லை. ஒட்டுமொத்த அணிக்கும் உண்மை தெரியும் என்பது அப்பட்டமானது. இந்த மோசடி போர்ட் எலிசபெத்தில் துவங்கவில்லை, டர்பனில் நடந்த முதல் டெஸ்டிலேயே துவங்கிவிட்டது. இதை நான் உறுதியாகச் சொல்வேன்" என்றார்.

மேலும், "டர்பன் மைதானத்தில் நான் நிறைய கிரிக்கெட் ஆடியுள்ளேன். அங்கு அவ்வளவு சீக்கிரமாக பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பே இல்லை. ஆனால் அந்த டெஸ்டில் மிக முன்கூட்டியே பந்து அசாத்தியமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. ஆஸ்திரேலியா வரம்பு மீறி ஏதோ ஒரு செயலில் ஈடுபட்டது அனைவருக்கும் தெரியும். அவர்கள் ஏமாற்றினார்கள் என்பதுதான் கசப்பான உண்மை" என்று டி வில்லியர்ஸ் கூறினார்.

சான்ட்பேப்பர் விவகாரம் தங்களுக்கு தெரியாது என பாட் கம்மின்ஸ் மற்றும் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், டி வில்லியர்ஸின் இந்த அதிரடி குற்றச்சாட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தை மீண்டும் தலைகுனிய வைத்துள்ளது.