பெண் கலெக்டர் விவகாரம்: உதயநிதி வீடியோவை நீக்க ஐகோர்ட் உத்தரவு
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் குறித்து சென்னை ஐகோர்ட் விசாரித்து வருகிறது.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு குறித்த தகவல்களையும், பதிவுகளையும் சமூக வலைதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நிருபர்களை சந்தித்தார்.
இது தொடர்பாக அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சென்னை ஐகோர்ட் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு முறையிட்டார்.
அப்போது அவர்,'' பேட்டியின் போது உதயநிதி உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்தார். ஐகோர்ட் தடையை மீறி பேசினார். இந்த விவகாரம் குறித்து உள்விசாரணைக்குழு விசாரிக்கிறது. ஆனால், ஐகோர்ட் உத்தரவை மீறி தவறான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வெளியிடுவதாக குறிப்பிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி லட்சுமி நாராயணன், உதயநிதி அளித்த பேட்டி மற்றும் அது தொடர்பான வீடியோக்கை ளசமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவை மீறியிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.