📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 20, 2026 07:00 PM

7 மாதங்களில் 10,309 உயிர்கள் பலி.. தமிழகத்தில் அரங்கேறும் பயங்கரம்! பின்னணி என்ன?

7 மாதங்களில் 10,309 உயிர்கள் பலி.. தமிழகத்தில் அரங்கேறும் பயங்கரம்! பின்னணி என்ன?

7 மாதங்களில் 10,309 உயிர்கள் பலி.. தமிழகத்தில் அரங்கேறும் பயங்கரம்! பின்னணி என்ன?

TN Road Accidents 2026: "தமிழகத்தில் ஏழை மாதங்களில் விபத்துகளில் 10,309 பேர் பலி,சாலைப் பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது."

Tamil Nadu Road Accidents 2026: தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் நடந்துள்ள 39,716 சாலை விபத்துகளில் 10,309 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 71,000 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 18,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில், ஜனவரி முதல் ஜூலை வரை 39,716 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 10,309 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 17,884 உயிரிழப்புகளும், 2023-ஆம் ஆண்டில் 18,347 உயிரிழப்புகளும், 2024-ஆம் ஆண்டில் 18,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அதேபோல, 2025-ஆம் ஆண்டில் 18,000 பேரும், தற்போது 2026-ஆம் ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான கணக்கீட்டின்படி 10,309 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது, தமிழகத்தில் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளைக் குறைக்க, போக்குவரத்துத் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளோடு இணைந்து தமிழக அரசு பணியாற்றி வருகிறது. தொடர்ந்து, சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதோடு, விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். நெடுஞ்சாலைகளில் அதிவேகமாகச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க, ஏ.ஐ. (AI) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய அதிநவீன கேமரா பொருத்தி, ஒருங்கிணைந்த கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி