📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion November 26, 2026 04:03 AM

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு விராலிமலை முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் கோலாகலம்

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு விராலிமலை முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் கோலாகலம்

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு விராலிமலை முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் கோலாகலம்

*பக்தர்கள் அரோகரா, அரோகரா பரவசம்

விராலிமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் அரோகரா, அரோகரா சரண முழக்கத்துடன் நேற்று மாலை தீபம் கோலாகலமாக ஏற்றப்பட்டது.

இக்கோயிலில் முருகன் அறுபடை வீடுகளுக்கு நிகராக பக்தர்களால் போற்றப்படும் விராலிமலை முருகன் கோயில் நகரின் மத்தியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்து வழங்கிய இத்தலத்திற்கு என்று பல்வேறு வரலாற்று சிறப்புகள் உள்ளன.

இக்கோயிலில் மலைமேல் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில் மேல் அமர்ந்திருக்கும் முருகனை காண உள்ளூர் மட்டுமல்லாது பல்வேறு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் விராலிமலை வந்து தங்கியிருந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.

முன் காலத்தில் பல முனிவர்கள் இக்கோயில் மலைக்கு வந்து பாறை குகையில் தவமிருந்து வழிபாடு நடத்தி சென்றுள்ளதாக தல வரலாறுகள் கூறுகின்றன. பல்வேறு சிறப்பு பெற்ற ஸ்தலமான இந்த மலைக்கோயில் மேலே செல்வதற்கு 207 படிகள் ஏறி செல்லும் பாதை, வயதானவர்கள் ஏறிச்செல்வதற்கு ஏதுவாக சறுக்கு வடிவிலான யானையடி பாதை, பைக், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல சாலை வசதி உள்ளது.

இந்நிலையில் நேற்று கார்த்திகை விழாவும் ஒன்று நிகழாண்டு விழா நேற்று கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பழம், பன்னீர், சந்தனம், குங்குமம், தயிர் உள்ளிட பல்வேறு பழங்கள், திரவியங்களால் 16 வகை அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து, நேற்று மாலை மேளதாளம் மங்கள இசை முழங்க மலைக்கோயில் உச்சியில் 25 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தூணில் அமைக்கப்பட்டிருக்கும் 50 கிலோ கொள்ளளவு கொண்ட பல்வேறு உலோகத்தால் செய்யப்பட்ட கொப்பறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு விராலிமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.