📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion November 25, 2026 09:01 PM

பதற்றம் குறையாக திருப்பரங்குன்றம் 2வது நாளாகவும் போலீஸ் குவிப்பு: மலைமேல் செல்ல தடை

பதற்றம் குறையாக திருப்பரங்குன்றம் 2வது நாளாகவும் போலீஸ் குவிப்பு: மலைமேல் செல்ல தடை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் 2வது நாளாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நகர் முழுவதும் குவிக்கப்பட்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

மலை மேல் செல்ல 2வது நாளாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை திருநாளான நேற்று (நவ. 24) ஒரு நாள் மட்டும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நேற்று முன்தினம் இரவு கலெக்டர் திருப்பரங்குன்றம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்தார். 15 மாவட்டங்களில் இருந்து 5,600 க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு மலைமேல், நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மலை மேல் செல்லும் பழநி ஆண்டவர் கோயில் தெரு, பெரிய ரத வீதி சந்திப்பில் இரும்பு தடுப்புகள் வைத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.‌ தீபம் ஏற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமே மலைமேல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர்.

நேற்று தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.‌ தீப தூணில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள், முருக பக்தர்கள் மலைக்கு போகும் பாதையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். வழக்கமாக தீபத்திருநாள் மட்டுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மலை மேல் செல்ல தடை விதிக்கப்படும்.‌மறுநாள் போலீஸ் பாதுகாப்பு விலகிக் கொள்ளப்பட்டு, பக்தர்கள் மலை மேல் செல்ல அனுமதிக்கப்படுவர்.‌ ஆனால் இன்று 2 வது நாளாக வழக்கத்தை விட அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.‌ தீபத்தூண், தீபம் ஏற்றப்பட்ட உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தின் அருகில் உள்ள மண்டபம், மலை முழுவதும், ஊர் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலைக்கு மேல் செல்லும் பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் தெரு, திருமதில் சந்து, கோட்டை தெரு, சுற்றியுள்ள தெருக்களில் வீட்டுக்கு ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பழநி ஆண்டவர் கோயில் தெருவில் வசிப்பவர்களின் ஆதார் அட்டையை சரிபார்த்து அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மலை மேல் செல்வதற்கு இரண்டாவது நாளாக இன்று போலீசார் தடை விதித்துள்ளனர். பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகளின் ஜீப்புகள் அனைத்து தெருக்களிலும் வரிசைகட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யாரேனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்ததற்காக ஐந்துக்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ் கள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும், மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கும் பயப்படுகின்றனர். திருப்பரங்குன்றம் மக்கள் இரண்டாம் நாளாக உச்சகட்ட பதற்றத்தில் இருந்தனர்.

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ...

பல்லடம்: கோவில் திருப்பணி குறித்து கள ஆய்வு மேற்கொள்ள ...

தஞ்சாவூர், தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் எட்டு ...

பாலக்காடு: பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் ...

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் ...