மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 26 நவம்பர் 2026
மேஷம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த மன உளைச்சல் நீங்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
ரிஷபம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியம் சாதகமாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.
மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சி மேற்கொள்வீர். திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் சிக்கல் இருக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பணியாட்கள் தொந்தரவு தருவார்கள்.
கடகம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
சிம்மம்: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் விலகும். வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக் கொண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி அன்பு காட்டுவார்.
கன்னி: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். உறவினர், பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பர். வியாபாரரீதியாக பிரமுகர்களை சந்திப்பீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: எதார்த்தமான பேச்சால் தடைபட்ட காரியத்தை முடிப்பீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
விருச்சிகம்: தாய்வழி உறவினர்களால் மனக்கசப்புகள் வந்துபோகும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். ஓரளவு லாபம் கிட்டும்.
தனுசு: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.
மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். தம்பதிக்குள்மனம் விட்டு பேசுவது நல்லது. வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். லாபம் உண்டு. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
கும்பம்: புதுப் புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. உடல்நலம் சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம் திருப்தி தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.
மீனம்: பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் வருவார்கள். அலுவலகத்தில் உங்களின் உழைப்புக்கு மதிப்பு உண்டு. மேலதிகாரி பாராட்டுவார்.