📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 27, 2026 03:31 AM

உ.பி சட்டமன்றத் தேர்தல் 25 லட்சம் அரசு வேலை, விவசாய கடன் தள்ளுபடி: சமாஜ்வாடி தேர்தல் அறிக்கை வெளியீடு

உ.பி சட்டமன்றத் தேர்தல் 25 லட்சம் அரசு வேலை, விவசாய கடன் தள்ளுபடி: சமாஜ்வாடி தேர்தல் அறிக்கை வெளியீடு

உ.பி சட்டமன்றத் தேர்தல் 25 லட்சம் அரசு வேலை, விவசாய கடன் தள்ளுபடி: சமாஜ்வாடி தேர்தல் அறிக்கை வெளியீடு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 2027 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளில் 25 லட்சம் பேருக்கு அரசு வேலையும், 3 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். லக்னோவில் நேற்று கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது, ‘‘முதியோர், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 ஓய்வூதியம் வழங்கப்படும். ரூ.5-க்கு உணவு வழங்க சமாஜ்வாடி உணவகங்கள் திறக்கப்படும்.

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மீண்டும் வழங்கப்படும். மூடப்பட்ட 26,000 ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்படும். விவசாய கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும். கரும்பு விவசாயிகளுக்கு 24 மணி நேரத்தில் பணம் வழங்க ரூ.15,000 கோடி நிதியம் உருவாக்கப்படும். 23 பயிர்கள் மற்றும் பாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, ரூ.50 கோடி வரையிலான அரசு ஒப்பந்தங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்’’ என அவர் தெரிவித்தார்