📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema November 26, 2026 12:01 PM

தமிழ் சினிமாவில் நடிப்பது பெருமையாக இருக்கிறது

தமிழ் சினிமாவில் நடிப்பது பெருமையாக இருக்கிறது

தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழில் நடிக்க வந்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. நடிகர் மணிகண்டனின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். தற்போது அவருடனேயே இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.என நடிகை திவ்யா ஸ்ரீபடா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் திவ்யா ஸ்ரீபடா. இவர் தற்போது சந்தோஷ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மணிகண்டனுடன் நடிப்பதில் மகிழ்ச்சி

'மக்கள் காவலன்' படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் தமிழ் சினிமா அனுபவம் குறித்து திவ்யா ஸ்ரீபடா கூறியதாவது: “தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழில் நடிக்க வந்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. நடிகர் மணிகண்டனின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். தற்போது அவருடனேயே இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் மணிகண்டன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நான் நீதிமன்றத்தில் பணியாற்றும் தட்டச்சராக (டைப்பிஸ்ட்) நடித்துள்ளேன். இது எதார்த்தமான படைப்பாக உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

என்னை நானே விமர்சித்துக் கொள்வேன்!

மேலும் தனது நடிப்பு குறித்த விமர்சனங்களை எவ்வாறு அணுகுகிறார் என்பது பற்றிப் பேசிய அவர், “ஒவ்வொரு நாளையும் எதிர்பார்ப்புடன் தொடங்குகிறேன். மற்றவர்களின் விமர்சனங்களைப் பற்றி நான் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், என்னைவிட எனக்கு யாரும் பெரிய விமர்சனத்தை வழங்கிவிட முடியாது. நன்றாக நடித்திருந்தால் நானே என்னைப் பாராட்டிக் கொள்வேன். ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை நானே திட்டிக்கொள்வேன். இவ்வாறு சுயபரிசோதனை செய்துகொள்ளும் பழக்கம்தான் எனது பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மதுரையின் உணவுகளை ருசித்த அனுபவம்

'மக்கள் காவலன்' படத்தின் படப்பிடிப்புக்காக மதுரைக்குச் சென்ற அனுபவம் குறித்தும் திவ்யா ஸ்ரீபடா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது மதுரையின் பிரபல உணவு வகைகளான பருத்திப்பால், ஜிகர்தண்டா உள்ளிட்டவற்றை ருசித்ததாகவும், அந்த அனுபவம் தன்னால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.

தமிழ் சினிமாவில் தனது முதல் படமாக வெளியாகவுள்ள 'மக்கள் காவலன்' திரைப்படம் தனக்கு நல்ல அறிமுகத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் திவ்யா ஸ்ரீபடா.