📅 Wednesday, 25 November 2026 IST | கார்த்திகை 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 25, 2026 07:32 AM

உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் vs சிந்தரோவ் முதல் சுற்றில் நடந்தது என்ன?

உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் vs  சிந்தரோவ் முதல் சுற்றில் நடந்தது என்ன?

உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் vs சிந்தரோவ் முதல் சுற்றில் நடந்தது என்ன?

ஜெனீவா: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில், குகேஷ் கருப்புக் காய்களுடன் விளையாடி ஜவோகிர் சிந்தரோவுக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். பட்டத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர், சிறந்த தற்காப்பு ஆட்டத்துடன் இந்தத் தொடரைத் தொடங்கியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குகேஷ் Berlin defence உத்தியைத் தேர்ந்தெடுத்தார். இதன் மூலம் முதல் ஆட்டத்திலேயே வலுவான நிலையை அமைப்பதே தனது குறிகோள் என்பதை அவர் வெளிப்படுத்தினார். கேண்டிடேட்ஸ் தொடரை போலவே, உஸ்பெனிஸ்தான் வீரர் சிந்தரோவ் தனது தொடக்க நகர்வுகளை அதிவேகமாகச் செய்தார்.

இதனால் குகேஷுக்கு நேரம் குறைந்தபோதிலும், அவர் அந்த அழுத்தத்திற்கு இடம் தராமல், தொடர்ந்து சிறந்த தற்காப்பு நகர்வுகளைக் கண்டறிந்தார். இறுதியில் 38 நகர்வுகளுக்குப் பிறகு ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ராணிகள் களத்தில் இருந்து வெளியேறிய பிறகு, சிந்தரோவ் ஏதேனும் ஒரு வகையில் முன்னிலை பெற முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. 25-வது நகர்வைச் சுற்றி, குகேஷின் 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே நேரம் இருந்தபோது, சிந்தரோவ் அவருக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். இருப்பினும், அந்தச் சூழ்நிலையில் செய்ய வேண்டிய குறிப்பிட்ட நகர்வுகளை உலகச் சாம்பியனான குகேஷ் மிகச் சரியாகச் செய்து ஆட்டத்தைச் சமாளித்தார்.

இந்த டிராவின் மூலம் இரு வீரர்களுக்கும் தலா அரை புள்ளிகள் வழங்கப்பட்டது. இதில் எந்த வீரர்கள் முதலில் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்களே சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள். இரு வீரர்களும் புதன்கிழமை மாலை நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் மீண்டும் மோதவுள்ளனர். இந்த ஆட்டத்தில் குகேஷ் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடுவார்.